வேர்ட்: கடைசி பக்கத்திலிருந்து பிரிண்ட்--கணிணிக்குறிப்புக்கள்
வேர்ட்: கடைசி பக்கத்திலிருந்து பிரிண்ட் அதிக பக்கங்களில் இருக்கும் வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பிரிண்ட் எடுத்து முடிக்கை...

வேர்ட்: கடைசி பக்கத்திலிருந்து பிரிண்ட்
அதிக பக்கங்களில் இருக்கும் வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பிரிண்ட் எடுத்து முடிக்கையில், தாள்கள் எல்லாம் வரிசையாக பக்கம் 1,2,3 என இல்லாமல் 40,39 என இருப்பதைக் காணலாம். இதனை மீண்டும் ஒவ்வொரு தாளையும் சரி செய்திட இன்னும் அதிக நேரம் ஆகும். இதனை எப்படி மாற்றலாம்? அச்சிட்டபின் நமக்கு வேலை இல்லாமல் செய்திடலாம்?
கடைசி பக்கத்தை முதலில் பிரிண்ட் செய்து பின் அப்படியே இறுதியிலிருந்து முதல் பக்கம் வரை டாகுமெண்ட் ஒன்றை அச்செடுக்கும்படி செய்திடலாம். இவ்வாறு அச்சிட்டுப் பெற கீழே கொடுத்துள்ளபடி செட் செய்திடவும்.
Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். நிறைய டேப்களுடன் Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Print என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் “Printing options” என்ற பகுதியில் உள்ள “Reverse print order” என்பதில் கிளிக் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடி வெளியேறவும்.
Post a Comment