உங்களுக்கு நீங்களே வைத்தியம் செய்யலாம்! --ஹோமியோபதி மருத்துவம்
நல்ல உடல்நிலையில் இருந்த எனது ஐந்து வயது மகனை குளிர்ந்த மாலைப் பொழுதில் வாடைக் காற்றில் பைக்கில் உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். வ...

நல்ல உடல்நிலையில் இருந்த எனது ஐந்து வயது மகனை குளிர்ந்த மாலைப் பொழுதில் வாடைக் காற்றில் பைக்கில் உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். வாடைக் காற்று பட்டதால் சில நிமிடங்களிலே அவனுக்கு தொண்டை வலி மற்றும் காதுவலி ஏற்பட்டுவிட்டது. அழ ஆரம்பித்தான். கையில் `அகோனைட்' மருந்து இருந்தது கொடுத்தேன்.
ஒரு மணி நேரத்திற்குள்ளே பையன் துரித நிவாரணம் பெற்றான்.
இதே போன்று இன்னொரு சம்பவம். என் நண்பரின் குடும்பத்தினர் நீண்ட நாள் கனவுடன் திருப்பதிக்குப் பயணமானார்கள். அவருக்கு பதினெட்டு வயதில் ஒரு மகள். அப்பெண்ணுக்கு மாதவிலக்கு ஏற்பட இருந்த காலக்கட்டம் அது. எனவே எங்கே மாதவிலக்கு ஏற்பட்டு சாமி தரிசனம் செய்ய முடியாமல் போய்விடுமோ என்று மிகவும் பயப்பட்டாள். இந்த பயம் மற்றும் அங்கு நிலவிய குளிர்காற்று அவளுக்கு மாதவிடாய் ஏற்படாமல் செய்தது. பயணம் முடிந்து 20 நாட்கள் ஆகியும் மாதவிடாய் வரவில்லை. பயந்து போனார்கள். உடனே நான் அகோனைட் கொடுத்தேன். மூன்று நாட்களில் நிவாரணம் கிடைத்தது.
அந்தச் சிறுவனுக்கு மிகுந்த பயந்த சுபாவம். அவனுக்கு வயது 12. இரவில் பயங்கரக் கனவு கண்டு திடீரென்று எழுந்துவிடுவான். திகிலுடன் கூச்சல் இட்டு அழுவான். இப்படி அடிக்கடி அவனுக்கு ஏற்படும். இதனால் உறவினர் வீட்டில் தங்கவோ, வெளியூர் செல்லவோ, தனியாகத் தூங்கவோ பயப்பட்டான். என் ஆலோசனையின் பேரில் `அகோனைட்' கொடுத்தார்கள். சில நாட்களில் எல்லாப் பயமும் நீங்கி இயல்பான நிலைக்கு வந்து விட்டான்.
திடீர் என்று நம்மைச் சில நோய்கள் தாக்கும். அத்தாக்குதலால் ஏற்படும் பயம், படபடப்பு மற்றும் அமைதியின்மையே நம்மைப் பெரிதும் பாதிக்கும். இதுவே நோயை வளரச் செய்துவிடும். இந்த ஆரம்ப அறிகுறிகளில் இருந்து நாம் விடுபட வேண்டும். இல்லாவிட்டால் ஆரம்பமே ஆபத்தாகிவிடும். இந்த ஆரம்பக் குறிகளில் இருந்து எளிதில் விடுபட `அக்கோனைட் நேப்பலஸ்' என்ற ஹோமியோ மருந்தினைப் பயன்படுத்தலாம். இது பற்றிக் கொஞ்சம் விரிவாகவே தெரிந்து கொள்ளுங்கள்.
திடீரென்று தோன்றும் எல்லா நோய்களுக்கும் ஆரம்ப நிலையில் கொடுக்கும் போது அகோனைட் அற்புதமாகக் குணமாக்குகிறது.
பயம், படபடப்பு மற்றும் அமைதியின்மை போன்று ஏற்படும் சகல வியாதிகளையும் தீர்ப்பதால் இம்மருந்து ஆண்களை விட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அதிகம் பயன் தருகிறது. எதையும் அவசரமாகவும், வேகவேகமாகவும் செய்பவர்கள், மிகுதியான பயந்த சுபாவம் உள்ளவர்கள், கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு, பரபரப்பாக ஏதாவது நடக்கும் இடங்களுக்குச் செல்லப் பயப்படுவார்கள், நோய் ஏற்படும்போது அது முத்தி மரணம் அடைந்துவிடுவோமோ என்றும், தான் இறக்கப் போவதாகவும் பயந்து நடுங்குபவர்களுக்கும் இம்மருந்து மிகவும் உதவும்.
தூக்கம் வராமை, பயங்கரக் கனவுகள், படுக்கையில் அங்கும் இங்குமாய் புரண்டு கொண்டிருத்தல், சிறிய சப்தம் கேட்டால் கூடத் திடுக்கிடுதல், சிறிய விஷயங்களுக்குக் கூட மிகுந்த வேதனைப்படுதல், பயம், கவலை மற்றும் அமைதியின்மைக்கு அகோனைட் தேர்வு செய்யலாம்.
பெண்களுக்குப் பயத்தினால் மாதவிடாய் தடைபடுதல்; பல மாதங்கள் வரை மாதவிடாய் ஏற்படாமை; பயத்தினால் கருச்சிதைவு ஏற்படும் போது உடனே `அகோனைட்' கொடுப்பதன் மூலம் அதைத் தடுக்கலாம். பிரசவ காலத்தில் ஆபத்து நேரும் என்று பயம் கொண்டுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கும் இது உதவும்.
பிறந்த குழந்தைக்கு பிரசவ காலத்தில் அதற்கு ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் பயத்தினால் சுவாசம் தடைபட்டு மயக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது மூத்திரம் வருவது தடைபட்டு இருந்தாலோ "அகோனைட்" குறைந்த வீரியத்தில் தண்ணீரில் கலக்கிக் கொடுத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
வறண்ட குளிர்காற்று (வாடைக்காற்று) சிலருக்கு ஒத்துக் கொள்ளாது. இதனால் உண்டாகும் பல்வலி, தலைவலி, தொண்டை வலி, சளி, இருமல், சுரம் போன்ற வியாதிகளுக்கு ஆரம்ப நிலையில் இம்மருந்து கொடுக்கப்படும்போது உடனடி நிவாரணம் கிடைக்கும். திடீரென்று தோன்றி குறுகிய காலத்தில் மறையும் (Acute Disease) அனைத்து வியாதிகளுக்கும் இது சிறந்த மருந்தாகும்.
அதி வேகமாகவும் அதிக வீரியத்துடனும் வெளிப்படும் நோய் வலியை (pain) தாள முடியாத வேதனைக்கு இந்த மருந்து நல்ல பலன் தரும்.
சிலருக்கு நோய் வாய்ப்பட்டிருக்கும்போது இசை கேட்கப் பிடிக்காது. மிகவும் சோகமான மன நிலையிலே உழண்டு கொண்டிருப்பார்கள். இவர்கள் படுத்திருந்தால் முகம் சிவந்திருக்கும். எழுந்தவுடன் வெளுத்துவிடும். உடம்பில் பல இடங்களில் பூச்சி மேய்வது போன்றோ அல்லது எறும்பு ஊறுவது போன்றோ உணர்வு ஏற்படும். இந்த உணர்வுகளுடன் இருப்பவர்களுக்கு `அகோனைட்' கொடுத்தால் குணம் அடைவார்கள்.
கண் நோய் : தூசு அல்லது வேறு ஏதாவது காரணங்களால் திடீரென்று கண் சிவத்தல், கண்ணில் எரிச்சல், கண்ணீர் வடிதல் இவற்றிற்கு ஆரம்ப நிலையில் அகோனைட் கொடுத்தால் சிறப்பாக வேலை செய்யும்.
திடீரென்று தோன்றும் வயிற்று வலி, பச்சை நிறமுள்ள வயிற்றுப் போக்கு, சீதபேதிக்கு அகோனைட் நல்ல மருந்து.
குளிர்ந்த காற்றினால் (வாடைக்காற்று) ஏற்படும் காதுவலி தொண்டை அழற்சி (Croop) இருமல், எச்சிலில் ரத்தம் வருதல், மார்பில் வலி, வலியுள்ள பாகத்தை கீழே வைத்துப் படுக்க முடியாமை. இவற்றிற்கு `அகோனைட்' நல்ல நிவாரணம் தரும்.
உடல் வியர்வை தடைபடுவதால் வரும் வியாதிகளுக்கு "அகோனைட்" நல்ல பலன் தரும்.
முக்கிய குறிப்பு : -
டைபாய்டு காய்ச்சலின் ஆரம்ப நிலையில் அகோனைட் கொடுக்கக் கூடாது.
விஷக் காய்ச்சலில் காய்ச்சலைக் குறைக்க, மற்ற மருந்துகளுடன் அகோனைட்டையும் கொடுக்கக் கூடாது.
நன்றாக உடல் வியர்வை ஏற்படும் போதும் அகோனைட் உபயோகிக்கக் கூடாது.
Post a Comment