சாண்விட்ச் இட்லி--சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள்: இட்லி மாவு - 2 கப் கேரட் - 1 பீன்ஸ் - 10 உருளைக்கிழங்கு - 1 வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சிபூண்டு விழுது - 1 டீ...

இட்லி மாவு - 2 கப்
கேரட் - 1
பீன்ஸ் - 10
உருளைக்கிழங்கு - 1
வெங்காயம் - 2
தக்காளி - 2
இஞ்சிபூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
• முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
• கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, சோம்பு போட்டு தாளித்து அதோடு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கியதும், வெங்காயம் சிறிது வதங்கியதும் தக்காளி, நறுக்கிய காய்கறிகள், இஞ்சிபூண்டு விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கி கடைசியாக கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து கிளறி, இறக்கி வைக்க வேண்டும்.
• ஒரு இட்லிப் பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றவும்.
• பிறகு இட்லித் தட்டுகளில் முதலில் அரைக் கரண்டி மாவை ஊற்றி, அதன் மேல் 2 டீஸ்பூன் மசாலாவை வைத்து, மேலும் அதன் மேல் அரைக் கரண்டி மாவை ஊற்றி மூடி வேக வைக்கவும்.
• மாவானது நன்கு வெந்ததும் அதனை எடுத்து பரிமாறுங்கள். இப்போது சுவையான சாண்விட்ச் இட்லி ரெடி!!!
• இதற்கு தொட்டுக்கொள்ள எதுவும் தேவையில்லை. மேலும் சத்தான உணவும் ஆகும்.
Post a Comment