முட்டை பொரியல் / முட்டை சப்பாத்தி - ---சமையல் குறிப்புகள்
முட்டை பொரியல் / முட்டை சப்பாத்தி - அமிர்தவர்ஷினி தேவையானவை:, முட்டை - 3 பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) தக்காளி - 1 (பொடியாக ...

தேவையானவை:,
முட்டை - 3
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
எண்ணேய் - தாளிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
முதலில் முட்டையை உப்பு போட்டு நன்கு நுரைவருவது போல் கலக்கவேண்டும். பின்பு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கொஞ்சம் சோம்பு போட்டு அது வெடித்தவுடன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கிக்கொள்ளவேண்டும், பின்பு தக்காளியைப் போட்டு நன்கு வதக்கிக்கொள்ள வேண்டும்.இந்த வதக்கிய கலவையில் மிள்காய்தூள் போட்டு அதையும் ஒரு வதக்கல்.
இப்போது அடுப்பில் தீயை குறைத்துக் கொண்டும், கலக்கி வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்றாக அடிபிடிக்காமல் கிளறவேண்டும், முட்டை பொடியாக ஆகும் வரை.
ரசம் சாதத்துக்கு நல்ல மேட்சிங் இந்த முட்டைப் பொரியல்.
இரவு சப்பாத்தி மீந்து விட்டதென்றால் கவலைப்படாதீர்கள். மீந்த சப்பாத்திகளை நான்காக பிய்த்து, மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றினால், கொஞ்சம் உதிரியாக ஆகிவிடும்.
இப்போது மேற்சொன்ன முறையில், மிளகாய் தூள் போட்டு வதக்கிய பின்னர், இந்த உதிரி சப்பாத்தியையும் போட்டு நன்றாக வதக்கவேண்டும். இப்போது அதன் மேல் முட்டை கலவையை ஊற்றி நன்றாக பிரட்டினால், முட்டை சப்பாத்தி ரெடி.
மீந்த சப்பாத்தி காலியாகிவிடும், மீண்டும் சப்பாத்திக்கு ஒரு சைட் டிஸ் தேவைப்படாது.
சில தகவல்கள்
1. முட்டை சீக்கிரம் வேகவேண்டுமானால், அதனோடு கொஞ்சம் உப்பை போட்டு வேகவையுங்கள். சீக்கிரம் வெந்துவிடும்.
2. முட்டையின் ஃப்ரெஷ்னெஸ் அறிய, அதனை தண்ணீரில் வையுங்கள். குறுக்கே இருந்தால் புது முட்டை, கொஞ்சம் சாய்ந்தாற் போல இருந்தால் அது 3-4 நாள் ஆன முட்டை, நேர்க்கோடாக இருந்தால் அது 10 நாட்கள் ஆன முட்டை. மிதந்து மேலே வந்தால், அது அழுகிய முட்டை.
-------------------------------------------------------------------------------------------------------
Post a Comment