பொரி விளங்கா உருண்டை---சமையல் குறிப்புகள்
தேவையான பொருட்கள்: புழுங்கலரிசி -- 1 படி (நன்றாக பொரிய வறுத்து அரைத்தது) பொட்டுக்கடலை மாவு -- 1/4 படி தேங்காய் -- 1 துருவியது வெல்லப்ப...

புழுங்கலரிசி -- 1 படி (நன்றாக பொரிய வறுத்து அரைத்தது)
பொட்டுக்கடலை மாவு -- 1/4 படி
தேங்காய் -- 1 துருவியது
வெல்லப்பாகு தயாரிக்க:
வெல்லம் -- 1 கிலோ
சுக்கு -- ஒரு துண்டு
ஏலக்காய் -- 4
செய்முறை:
வெல்லத்தை கொஞ்சம் தண்ணீர் சேர்த்து சுக்கை தட்டி, ஏலக்காயை பிய்த்து போட்டு பாகு போல காய்ச்சி வடிகட்டி வைக்கவும்.
தேங்காய் துருவியதை நெய்யில் வறுத்து வைக்கவும்.
பின் அரிசிமாவு, பொட்டுக்கடலைமாவு, தேங்காய் அனைத்தும் கலந்து கொஞ்சம் வெல்லப்பாகை ஊற்றி உருண்டையாக பிடிக்கவும்.
சத்தான பொரி விளங்கா உருண்டை ரெடி.
-------------------------------------------------------------------------------------------------------------------------
Post a Comment