வந்துவிட்டது வரிச் சலுகை! --- இன்ஷூரன்ஸ்
வந்துவிட்டது வரிச் சலுகை! என்னதான் நாம் மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தாலும், நோய் இருக்கிறதா இல்லையா என்று நாம் செய்யும் சோதனைக்கு க்ளை...

என்னதான் நாம் மருத்துவக் காப்பீடு எடுத்திருந்தாலும், நோய் இருக்கிறதா இல்லையா என்று நாம் செய்யும் சோதனைக்கு க்ளைம் வாங்க முடியாது. அதற்கு நம் கைக்காசைப் போட்டுத்தான் செலவு செய்ய வேண்டி இருக்கும். இப்படிப் பரிசோதனைகளுக்காக நாம் செய்யும் செலவுகளுக்கு, இந்த மத்திய நிதிநிலை அறிக்கையில் வரி விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ரூ. 5,000 வரை செய்யும் பரிசோதனைகளுக்கு இனி வரி விலக்கு உண்டு. ஏற்கெனவே, மருத்துவக் காப்பீடு ப்ரீமியத்துக்காக நாம் செலுத்தும் தொகையில் ரூ. 15,000 வரை வரி விலக்கு இருக்கிறது. இது இல்லாமல் நமது பெற்றோருக்கும் நாம்தான் மருத்துவக் காப்பீடுக்கான ப்ரீமியம் செலுத்துகிறோம் என்றால், அவர்களுக்குச் செலுத்தும் ப்ரீமியத்திலும் ரூ. 15,000 வரி விலக்காக வாங்கிக் கொள்ளலாம். .
Post a Comment