சமையல் டிப்ஸ் !!! -- வீட்டுக்குறிப்புக்கள்,
சமையல் டிப்ஸ் ஒரு டேபிள் ஸ்பூன் தனியா மிளகு 6 இரண்டையும் வறுத்து பொடியாக்கி புளிகாய்சலை சாதத்துடன் கிளறும்போது சேர்த்து கலந்து பிசைந...

ஒரு டேபிள் ஸ்பூன் தனியா மிளகு 6 இரண்டையும் வறுத்து பொடியாக்கி புளிகாய்சலை சாதத்துடன் கிளறும்போது சேர்த்து கலந்து பிசைந்தால் புளியோதரை சூப்பராக இருக்கும்
ரவா உப்புமா செய்யும்போது பாதி தண்ணீரும்,பாதி தேங்காய் பால் அல்லது பசும்பால் சேர்த்து செய்தால் உப்புமா மிகவும் சுவையாக இருக்கும்.
மெதுவடை செய்யும்போது உளுந்தை சரியாக 1/2 மணிநேரம் ஊறவைத்தால் போதும்.முக்கால் பாகம் ஊறியும்,கால் பாகம் ஊறாமலும் இருப்பது தான் சரியானபதம்.
பாகற்காயை எப்படி செய்தாலும் கசக்கும்.அதற்க்கு காயை அறிந்து முதலில் உப்பு போட்டு பிசைந்து 10 நிமிடம் ஊறிய பிறகு,புளித்தண்ணீரில் 10நிமிடம் ஊறவைத்து கழுவி சமைத்தால் கசப்பு ஒரளவு குறையும்
தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்
ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும் அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம்
செய்யும்போது எளிதாக செய்யலாம்
தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும்
பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்
பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.
மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்
Post a Comment