காஸ் சிலிண்டருக்கும் காலாவதி உண்டு--உபயோகமான தகவல்கள்
என் வீட்டுக்கு இந்த முறை கேஸ் சிலிண்டர் வந்தபோது, அதை செக் செய்த நான், அதன் கியாரன்டி முடிந்திருந்ததால்... வேறு சிலிண்டர் கேட்டுப் பெற்றுக் ...

'அது என்ன கியாரன்டி என்கிறீர்களா..?'
சிலிண்டரை, மேலே இருக்கும் கைப்பிடி வளையத்துடன் இணைப்பதற்காக மூன்று இரும்புப் பட்டைகள் வைத்திருப்பார்கள். அதில் ஒரு பட்டையில் ஏ, பி, சி, டி என நான்கு எழுத்துக்களில் ஏதாவது ஒன்றுடன், இரண்டு எண்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். ஏ - ஜனவரி முதல் மார்ச் வரை, பி - ஏப்ரல் முதல் ஜூன் வரை, சி - ஜூலை முதல் செப்டம்பர் வரை, டி - அக்டோபர் முதல் டிசம்பர் வரை என அந்த எழுத்துக்கள் முறையே மூன்று மாதங்களைக் குறிக்கும். அதிலிருக்கும் எண்கள்... வருடத்தைக் குறிக்கும். இதுதான் சிலிண்டரின் கிராயன்டி காலம். எனக்கு வந்த சிலிண்டரில் டி - 11 என்று எழுதப்பட்டிருந்தது. அதாவது, 'டிசம்பர் 2011' என்பதுதான் அதன் பொருள். அந்த தேதியுடன் அதன் கியாரன்டி முடிந்துவிட்டதால்... மாற்றி வாங்கினேன்.
Post a Comment