காளான் வடை -- சமையல் குறிப்புகள்
காளான் வடை தேவையானவை: பட்டன் காளான் - அரை கிலோ, கடலைப்பருப்பு, வேர்க்கடலை - தலா 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பூண்...


தேவையானவை: பட்டன் காளான் - அரை கிலோ, கடலைப்பருப்பு, வேர்க்கடலை - தலா 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம் - கால் கப், பூண்டு - 4 பல், இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 3, சோம்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு
செய்முறை: கடலைப்பருப்பையும் வேர்க்கடலையையும் ஒரு மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும். பாதி அரைக்கும்போது, நறுக்கிய வெங்காயம், பூண்டு, தோல் சீவிய இஞ்சி, பச்சை மிளகாய், சோம்பு சேர்த்து கெட்டியாக அரைக்கவும். பிறகு, காளானை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கி, உப்புத் தண்ணீரில் அலசவும். வெறும் கடாயில் காளானைப் போட்டு வதக்கவும். அதில் இருக்கும் தண்ணீர் வற்றி காளான் சுருண்டு வந்ததும் இறக்கி, அரைத்து வைத்திருக்கும் மாவுக் கலவையில் சேர்க்கவும். இதனுடன் உப்பு, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்து, வடைகளாகத் தட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால்... சுவையான காளான் வடை ரெடி!
காளான் வடை: வேர்க்கடலையை ஊற வைத்து அரைக்காமல், மிக்ஸியில் கொரகொரவெனப் பொடித்துப் போட்டால் வடை 'க்ரிஸ்பி’யாக இருக்கும்.
2 comments
தொடர்ந்து சமையல் குறிப்புகள் போட்டு அசத்துறீங்க. வீட்டம்மா சொல்லி தர்றாங்களா?
அன்பிற்கினிய நண்பர் மோகன் குமார் அவர்களுக்கு அன்புடன் A.S. முஹம்மது அலி எழுதியது. பெட்டகம் வலைப்பூவை பார்த்து தாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு இனிய நன்றிகள் பல! தொடர்ந்து இணைப்பில் இருந்து கருத்துக்களை நாளும் தெரிவிக்க விழைகின்றேன். அன்புடன் A.S. முஹம்மது அலி.
Post a Comment