புதினா துவையல்-2--துவையல்கள்
புதினா துவையல்-2 தே.பொருட்கள்: புதினா - 1 கட்டு கொத்தமல்லி - 1 கட்டு கறிவேப்பில்லை - 3 இணுக்கு இஞ்சி - சிறுதுண்டு தாளிப்பு வடகம் - 2 டேபிள...

https://pettagum.blogspot.com/2011/11/2_6956.html
புதினா துவையல்-2
தே.பொருட்கள்:
புதினா - 1 கட்டு
கொத்தமல்லி - 1 கட்டு
கறிவேப்பில்லை - 3 இணுக்கு
இஞ்சி - சிறுதுண்டு
தாளிப்பு வடகம் - 2 டேபிள்ஸ்பூன்
வெ.உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் - தேவைக்கு
காய்ந்த மிளகாய் - 4
புளி - 1 கோலிக்குண்டளவு
தாளிக்க:
கடுகு+உளுத்தம்பருப்பு = 11/2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - வாசனைக்கு
செய்முறை:
* புதினா,கொத்தமாலி,கறிவேப்பிலை அனைத்தும் சுத்தம் செய்துக் கொள்ளவும்.
*வெறும் கடாயில் உளுத்தம்பருப்பை வாசனை வரும் வரை வறுக்கவும்.
*இஞ்சி,காய்ந்தமிளகாயை எண்ணெயில் வறுக்கவும்.
*வடகத்தை எண்ணெயில் பொரிக்கவும்,பின் புதினாவை லேசாக வதக்கவும்.
*ஆறியதும் வதக்கிய அனைத்து பொருட்கள்+உப்பு+புளி+கறிவெப்பிலை+கொத்தமல்லி சிறிது நீர் தெளித்து விழுதாக கெட்டியாக அரைக்கவும்.
*கறிவேப்பிலை,கொத்தமல்லியை வதக்ககூடாது.பச்சையாகதான் அரைக்கனும்.
*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டு தாளித்து அரைத்த விழுதை சேர்த்துக் கிளறவும்.
*எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி ஆறவைத்து உபயோக்கிக்கலாம்.
பி.கு:
அனைத்து வகை சாதம்,இட்லி,தோசைக்கு ஏற்றது.ஒரு வாரம் வரை ப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தலாம்.
Post a Comment