டோக்ளா தேவையான பொருட்கள் கடலை மாவு 100 கிராம் தயிர் 80 கிராம் தண்ணீர் 25 மில்லி கடுகு, மஞ்சள் தூள் தலா கால் தேக்கரண்டி, உப...
டோக்ளா
தேவையான பொருட்கள்
கடலை மாவு 100 கிராம்
தயிர் 80 கிராம்
தண்ணீர் 25 மில்லி
கடுகு, மஞ்சள் தூள் தலா கால் தேக்கரண்டி,
உப்பு தேவையான அளவு
பெருங்காயம் அரை தேக்கரண்டி
இஞ்சி விழுது ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் 1
தேங்காய் துருவல் 2 தேக்கரண்டி
கொத்தமல்லி சிறிதளவு
வெங்காயம் 2 (பொடியாக நறுக்கியது)
செய்முறை : கடலை மாவு, தயிர், தண்ணீர், மஞ்சள் தூள், உப்பு இவற்றை முதலில் நன்றாக சேர்த்து, கலந்து கொள்ளவும். இஞ்சி விழுது, வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் இவற்றை கடுகோடு சேர்த்து, தாளித்து, தனியே வைக்கவும். கலந்து வைத்த மாவில் கொத்தமல்லி, தேங்காய் துருவலை கலந்து, குக்கரில் வேக வைக்கவும். பிறகு சின்ன, சின்ன துண்டுகளாக நறுக்கி, தனியாக தாளித்து வைத்த பொருட்களை துண்டுகளுடன் சேர்க்கவும்.
Post a Comment