பகோடா வத்தல்--வடாம் வகைகள்
பகோடா வத்தல் தே.பொருட்கள்: ஜவ்வரிசி - 2 கப் அரிசிமாவு -2 கப் உப்பு - தேவைக்கு சின்ன வெங்காயம் - 100 கிராம் பச்சை மிளகாய் -10 சோம்பு - 1 1/2...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_3440.html
பகோடா வத்தல்
தே.பொருட்கள்:
ஜவ்வரிசி - 2 கப்
அரிசிமாவு -2 கப்
உப்பு - தேவைக்கு
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் -10
சோம்பு - 1 1/2 டேபிள்ஸ்பூன்
புதினா கொத்தமல்லி - தலா 1 கைப்பிடியளவு
இஞ்சி - 1 பெரிய துண்டு
செய்முறை:
*ஜவ்வரிசியை முதல்நாள் இரவே நீரில் ஊறவைக்கவும்.
*வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி+புதினா கொத்தமல்லி இவைகளை பொடியாக நறுக்கவும்.
*ஒரு கப்=4 கப் தண்ணீர் அளவு,ஒரு பாத்திரத்தில் 16 கப் தண்ணீர் வைத்து கொதிக்கவிடவும்.
*அரிசிமாவு+ஜவ்வரிசியை நன்கு கையால் பிசைந்து தண்ணீர் விட்டு கொஞ்சம் கரைத்துக் கொள்ளவும்.
*தண்ணீர் கொதித்ததும் பொடியாக அரிந்த பொருட்கள்+உப்பு+ஜவ்வரிசி+அரிசிமாவு சேர்த்து நன்கு துழவி விடவும்.மாவு நன்கு வெந்ததும் இறக்கவும்.
*வெயிலில் ஒரு காட்டன் துணியில் மாவை கொஞ்ச கொஞ்சமா கிள்ளி வைக்கவும்.
*மாலையில் நன்கு காய்ந்திருக்கும் அதை துணியின் மறுபக்கத்தில் தண்ணீர் தெளித்து வத்தலை எடுத்து காற்றோட்டமாக வைக்கவும்.
*பின் மறுநாள் நன்கு வெயிலில் காயவைத்து எடுக்கவும்.
*தேவையான போது எண்ணெயில் பொரித்து சாப்பிடலாம்.பொரிக்கும் போது பகோடா பொரித்தது போல் வாசனையாக இருக்கும்.
பி.கு:
1. தண்ணிர் போதுமானதா இல்லையெனில் சிறிது வெந்நீர் சேர்க்கவும்.குளிர்ந்த நீர் சேர்க்ககூடாது,சேர்த்தால் வத்தல் விண்டுபோய்விடும்.
2. மாவு வெந்ததா எனபார்க்க கையில் தண்ணிர் தோட்டு மாவு தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டக்கூடாது.
3. வத்தலில் எப்போதும் உப்பு குறைவா போடவும்.வாயில் வைத்து பார்க்கும்போது போதுமானதா இருக்காதமாதிரி இருக்கும்,ஆனால் காய்ந்த பின் எண்ணையில் பொரித்து சாப்பிட்டால் சரியா இருக்கும்.
Post a Comment