அரிசி வடாம் [2]--வடாம் வகைகள்
அரிசி வடாம் [2] தேவையான பொருள்கள்: பச்சரிசி – 4 கப் ஜவ்வரிசி – 1 கப் பச்சை மிளகாய் – 4 உப்பு பெருங்காயம் எலுமிச்சைச் சாறு செய்முறை: பச...

https://pettagum.blogspot.com/2011/11/2_2211.html
அரிசி வடாம் [2]
தேவையான பொருள்கள்:
பச்சரிசி – 4 கப் ஜவ்வரிசி – 1 கப் பச்சை மிளகாய் – 4 உப்பு பெருங்காயம் எலுமிச்சைச் சாறு
செய்முறை:
- பச்சரிசியைத் தண்ணீரில் களைந்து நிழலில் உலர்த்தி, முக்கால் பதம் காய்ந்ததும் (பிடித்தால் பிடிக்கவரும், உதிர்த்தால் உதிர்க்க வரும்) ஜவ்வரிசியைச் சேர்த்து மிஷினில் அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த மாவில் ஒரு கப் மாவிற்கு 6 கப் தண்ணீர் என்ற அளவில் அடிகனமான பாத்திரத்தில் போட்டு கட்டிகளில்லாமல் கலக்கிக் கொள்ளவும்.
- அரைத்த விழுதையும் சேர்த்து அடுப்பில் வைத்து நிதானமான தீயில் நன்றாக மாவு வெந்து நிறம் மாறி, குழம்பாகச் சேர்ந்து வரும் வரை கிளறி இறக்கவும்.
- விரும்பினால் எள் அல்லது சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்.
- இறக்கியபின் எலுமிச்சைச் சாறு பிழிந்து கலக்கவும்.
- பிளாஸ்டிக் பேப்பரில் ஒவ்வொரு கரண்டியாக மாவை வைத்து அப்பளம்போல் பெரிய வட்டங்களாக இழுத்துக் கொள்ளவும்.
- வெயிலில் நன்கு காயவைத்து எடுத்துப் பொரிக்கவும்.
- அரிசி அப்பளம் போல் இருக்கும்.
Post a Comment