ஷாஹி துக்கடா -- சமையல் குறிப்புகள்
ஷாஹி துக்கடா தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, பால் - 3 கப், நெய் - கால் கப், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், முந்த...


தேவையானவை: பிரெட் துண்டுகள் - 6, பால் - 3 கப், நெய் - கால் கப், சர்க்கரை - ஒன்றரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், முந்திரி - 10, திராட்சை - 10
செய்முறை: பாலை சுண்டக் காய்ச்சி, அதில் ஏலக்காய்த்தூள், சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கி இறக்கவும். பிரெட் துண்டுகளின் ஓரத்தில் உள்ள பிரவுன் பகுதிகளை 'கட்’ செய்து விட்டு, நான்கு துண்டுகளாக நறுக்கவும். அவற்றை நெய்யில் 'மொறுமொறு’வென பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். பிறகு பால் கலவையில் ஐந்து நிமிடம் ஊற வைத்து, முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து, பால் - பிரெட் கலவை மீது தூவி பரிமாறவும்.
கமென்ட்ஸ்...ஷாஹி துக்கடா: பாலின் அளவைக் குறைத்து, பால் பவுடர் அல்லது 'மில்க் மெய்ட்' சேர்த்தால் சுவை கூடும்.
Post a Comment