மட்டன் சுக்கா--சமையல் குறிப்புகள்
அசத்தல் மட்டன் சுக்கா ரெசிபி... தேவையானவை: மட்டன் - 1/2 கிலோ, தயிர் - 1/2 கப், இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ஒன்றரை ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 ...
தேவையானவை: மட்டன் - 1/2 கிலோ, தயிர் - 1/2 கப், இஞ்சி - பூண்டு பேஸ்ட் - ஒன்றரை ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன், சின்ன வெங்காயம் - 1 கப், சீரகத்தூள் - 1/2 ஸ்பூன், எண்ணெய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மட்டனை நன்றாகக் கழுவிய பின், மிளகாய்த்தூள், தயிர், இஞ்சி - பூண்டு பேஸ்ட், சீரகத்தூள், உப்பு ஆகியவற்றை கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெங்காயத்தை பொன் நிறமாகும் வரை வதக்கவும். அதனுடன் மட்டன் கலவையை சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். பின் அதைக் குக்கரில் போட்டு, மூன்று விசில் விட்டு இறக்கவும். குக்கரைத் திறந்து கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்க்கவும். சுவையான மட்டன் சுக்கா ரெடி !
Post a Comment