அம்மா...கவிதைத்துளிகள்!
அம்மா சுமையைச் சுகமாக்கி சுமந்து சுகமடைந்தாய் உதிரத்தை அமுதாக்கி உயிரூட்டினாய் பத்தியச் சோறுண்டு பாதுகாத்தாய் முதல் உறவாய் முதல் குருவாய...

https://pettagum.blogspot.com/2011/11/blog-post_5754.html

சுமையைச் சுகமாக்கி சுமந்து சுகமடைந்தாய் உதிரத்தை அமுதாக்கி உயிரூட்டினாய் பத்தியச் சோறுண்டு பாதுகாத்தாய்
முதல் உறவாய் முதல் குருவாய் முதல் இறையாய் நிறைந்தாய்
என் உணர்வே உன் உயிராய் என் உறவே உன் உலகாய் மா(ற்)றினாய்
கைமாறில்லாக் கடனாற்றி கடனாளியாக்கிவிட்டாய் பாசம் பொழிந்து மழையானாய் எனைக் காக்க நெருப்பானாய் சிறகடிக்க விண்ணானாய்
தன்னலமற்ற தாயே... நீயின்றி நானில்லையே ஆயிரம் உறவுகள் கொண்டாலும் உனக்கு இணை இல்லையே...
கோயிலில் தொழுதாலும் அங்கே புன்னகைப்பது உன் முகம் தான்
கடவுள் கண்முன் வந்தால் கேட்பேன் ஒரே வரம் "மீண்டும் உன் கருவறையில் ஓர் இடம்"
Post a Comment