தலைக்கறி பிரட்டல் தேவையான பொருள்கள்: தலைக்கறி - அரை கிலோ சின்னவெங்காயம் - 150 கிராம் பெரிய வெங்காயம் - 1 மிளகாய்தூள் - 1 ஸ...
தலைக்கறி பிரட்டல்
தேவையான பொருள்கள்:
தலைக்கறி - அரை கிலோ
சின்னவெங்காயம் - 150 கிராம்
பெரிய வெங்காயம் - 1
மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
மல்லிதூள் - 1 ஸ்பூன்
மிளகுதூள் - 3 ஸ்பூன்
மஞ்சள்தூள் - அரை ஸ்பூன்
இஞ்சி,பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
கரம்மசாலா - 1 ஸ்பூன்
பட்டைசோம்பு,கிராம்பு - தேவையான அளவு
மல்லி இலை - சிறிதளவு
எண்ணெய்,உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கறியை சுத்தம் செய்து கொள்ளவும். குக்கரில் தலைக்கறியை போட்டு இஞ்சி,பூண்டு பேஸ்ட் 1 ஸபூன் போட்டு சிறிதுதண்ணீர், உப்பும் சேர்த்து 4 விசில் வரை வேக வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டைசோம்பு,கிராம்பு போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்கி மீதி இஞ்சி,பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி மஞ்சள்தூள் ,கரம்மசாலா
மிளகாய்தூள் ,மல்லிதூள் போட்டு வதக்கி இதில் வேக வைத்த கறியை கொட்டி நன்கு வதக்கவும்.
தண்ணீர் வற்றி மசாலா கெட்டியானவுடன் மிளகுதூள்,உப்பும் சேர்த்து 5 நிம்டம் கிளரி மல்லி இலை தூவி இறக்கவும்.
Post a Comment