தேங்காய் ஸ்டப்டு கோவா லட்டு---சமையல் குறிப்புகள்,
தேவையானவை: சர்க்கரை இல்லாத கோவா - அரை கப், சர்க்கரை - கால் கப், மஞ்சள் ஃபுட் கலர் - கால் டீஸ்பூன். தேங்காய் பூரணத்துக்கு: தேங்காய் துருவல...

https://pettagum.blogspot.com/2012/04/blog-post_6557.html
தேவையானவை: சர்க்கரை இல்லாத கோவா - அரை கப், சர்க்கரை - கால் கப், மஞ்சள் ஃபுட் கலர் - கால் டீஸ்பூன்.
தேங்காய் பூரணத்துக்கு: தேங்காய் துருவல் - ஒரு கப், சர்க்கரை - அரை கப், ஏலக்காய்த்தூள் - கால் கப்.
செய்முறை: அடிகனமான பாத்திரத்தில் சர்க்கரை, தேங்காய் துருவலை சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும். ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிளறி இறக்கி ஆறவிடவும். பூரணம் ரெடி!
மற்றொரு அடிகனமான பாத்திரத்தில் கோவா, சர்க்கரை, ஃபுட் கலர் சேர்த்து, கையில் ஒட்டாமல் வரும்வரை கிளறி ஆற விடவும். இப்போது இந்த கோவாவிலிருந்து சிறிய உருண்டையை எடுத்து உள்ளங்கையில் வைத்துத் தட்டி, நடுவில் தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, நன்றாக உருட்டி வைக்கவும். லேசான சூட்டில் லட்டின் மேல் லேசாக கத்தியால் கீறிவிடவும்.
Post a Comment