ஒரு கோப்பைத் தேநீர்!---சமையல் குறிப்புகள்,

      தேநீர் என்பது இயற்கை பானம். அதை வெந்நீரில் போட்டு வடிக்கட்டி குடிப்பதே சிறந்த முறை. இதில் பால் சேர்க்கும்போது அதில் உள்ள வேதிப் பொருட...

      தேநீர் என்பது இயற்கை பானம். அதை வெந்நீரில் போட்டு வடிக்கட்டி குடிப்பதே சிறந்த முறை. இதில் பால் சேர்க்கும்போது அதில் உள்ள வேதிப் பொருட்கள் தேநீரில் உள்ள சத்துக்களை முறித்துவிடும். எந்த வகை டீத்தூளாக இருந்தாலும், தண்ணீரில் டீத்தூளைப் போட்டு கொதிக்கவிடக் கூடாது. மாறாக, டீத்தூளை ஒரு கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொண்டு அதில், நன்கு கொதிக்கவைக்கப்பட்ட வெந்நீரை ஊற்ற வேண்டும். இரண்டு - மூன்று நிமிடங்களில் டீத்தூளின் சாறு அனைத்தும் வெந்நீரில் கலந்துவிடும். அந்த நீரை அப்படியே அருந்தலாம்'' என்கிறார் தொட்டபெட்டா டீ ஃபேக்டரியின் பொது மேலாளர் வரதராஜன்.

டீயில் ஆறு விதமான பாலிபீனால்கள் உள்ளன. மேலும் காஃபின், தியோபுரோமின், தியாஃபிலின் போன்ற அல்கலாய்டுகள் உள்ளன. இவை மனித உடலுக்கு புத்துணர்வைத் தருபவை. சிகரெட் புகைப்பதால் உடலில் படியும் நிகோடின் அளவை தியோபுரோமின் குறைப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

வயது முதிர்வைத் தாமதப்படுத்தும் ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் இதில் அதிக அளவில் உள்ளன. இது உடலில் உள்ள தேவையற்றக் கொழுப்பை குறைத்து உடலினை சமச்சீராக பராமரிக்கிறது. நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கிறது. எபிகேலோ கேட்சின் என்ற பொருள் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்கிறது. பாலிபீனால்கள் புற்றுநோய் செல்களை வளரவிடாமல் தடுக்கின்றன. மேலும் மூளையில் ஆல்ஃபா அலைகளைத் தூண்டி மனதுக்கு அமைதி தருகின்றன. இவை தவிர டீயில் வைட்டமின் பி, சி, ஈ, கே;  பொட்டாசியம், துத்தநாகம், மாங்கனீசு ஆகியவையும் உள்ளன. கலோரி இதில் துளியும் இல்லை. அனைத்துச் சத்துக்களும் க்ரீன் டீயில் அதிகபட்ச அளவிலும் டஸ்ட் டீயில் குறைந்தபட்ச அளவிலும் உள்ளன.

 சில்வர் டிப்ஸ் டீ

இந்த வகை டீ தயாரிக்க தேயிலையின் மொக்குகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. தேயிலையின் மொக்குகள் வெண்மையாக வெள்ளி நிறத்தில் இருப்பதால் இதற்கு சில்வர் டிப்ஸ் டீ என்று பெயர் வந்துள்ளது. க்ரீன் டீக்கு அடுத்தபடியாக இதில் தேயிலையின் சத்துக்கள் மிகுதியாக உள்ளன. இதன் சுவை அதிகம்.

 டஸ்ட் டீ

பெரும்பாலானவர்கள் அருந்தும் டீ. துளிர், மொக்குகள் தவிர்த்து ஏனைய இலைகளைப்  பறித்து இயந்திரத்தின் உதவியுடன் இந்த டீத்தூள் தயாரிக்கப்படுகிறது. முழுமையாக ஆக்சிடேஷன் செய்வார்கள் (சுமார் ஒன்றரை மணி நேரம்). இதனால் பச்சை நிறத்தில் இருக்கும் தேயிலை பழுப்பு நிறத்துக்கு மாறிவிடும். இதில் சுவையைவிட திடம் அதிகமாக இருக்கும். காஃபின் அதிக அளவில் இருக்கும். இதனால் இந்த டீ குடித்ததும் புத்துணர்வு தூண்டப்படும். மற்ற டீத்தூள் வகைகளைவிட இதில் ஊட்டச்சத்துக்கள் குறைவே.

 க்ரீன் டீ

தேயிலைச் செடியின் முதல் இரண்டு துளிர் இலைகளும் அவற்றுடன் இணைந்த மொக்கும் பறிக்கப்பட்டு, தயாரிக்கப்படும் டீத்தூள் இது. தேயிலையில் இருக்கும் பெரும்பாலானச் சத்துக்கள் இதில் அப்படியே இருக்கின்றன. சுவையைப் பொறுத்தவரை மற்ற டீ வகைகளைப் போல அல்லாமல் சற்று துவர்ப்பாக இருக்கும். அதனால்தான், இந்த டீத்தூளைக் கொண்டு டீ தயாரிக்கும்போது எலுமிச்சையைச் சேர்த்துக்கொள்ளும்படிப் பரிந்துரைக்கிறார்கள்.

 லெமன் டீ

லெமன் டீ ஒரு இயற்கையான கிருமிநாசினி. க்ரீன் டீயுடன் எலுமிச்சை சேர்வதால் தேயிலையின் பயன்களுடன் எலுமிச்சையின் நற்பயன்களையும் இது தருகிறது. உடலுக்கு மட்டுமல்லாமல் மனதுக்கும் புத்துணர்வை இந்த டீ தருகிறது. செரிமானத்துக்கு உதவுவதுடன் உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் வெளியேறவும் பயன்படுகிறது. நோய் எதிர்ப்புச் சக்தியையும் லெமன் டீ அளிக்கிறது.

 ஓலாங் டீ

'ஓலாங்’ என்றால் சீன மொழியில் 'கருப்பு ட்ராகன்’ என்று பொருள். க்ரீன் டீ போன்று இரண்டு துளிர் இலைகள் மற்றும் அதனுடன் சேர்ந்த மொக்கு ஆகியவற்றைப் பறித்து பதமாக காயவைக்கப்படும் டீத்தூள் இது. கைகளால் நசுக்கித் தயாரிக்கப்படுவது என்பதால் இதன் விலை அதிகம். மேலே சொன்ன டீத்தூள் வகைகளைப் போல அல்லாது குளிர்ந்த காற்று மற்றும் வெப்பக் காற்றை மாற்றி மாற்றிக் கொடுத்து பதப்படுத்தும் ஆக்சிடேஷன் முறையைப் பின்பற்றி தயாரிக்கப்படுகிறது. எனினும், இதில் பதப்படுத்தப்படும் நேரம் குறைவு (அதிகபட்சம் 20 நிமிடங்கள்). க்ரீன் டீயைவிட இதில் சத்துக்கள் சற்று குறைவுதான்.

 இஞ்சி டீ

தேநீருடன் இஞ்சி சேரும்போது இஞ்சியின் பலன்களும் அப்படியே கிடைக்கின்றன.  ஒற்றைத் தலைவலி, வாந்தி போன்றவற்றை இஞ்சி டீ பருகுவதால் தவிர்க்கலாம். உணவு செரிமானத்துக்கும் இது உதவுகிறது. மூட்டுவலி மற்றும் மூட்டு வீக்கத்துக்கும் நிவாரணம் தரும். ரத்த ஓட்டத்தையும் சீராக்கும். சர்க்கரைக்குப் பதிலாக, இஞ்சியைத் தேனில் ஊற வைத்துப் பயன்படுத்தினால் கூடுதல் சுவை கிடைக்கும்.

Related

சமையல் குறிப்புகள் 6690180188698091722

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item