மூட்டு வலிக்கு இயற்கை வைத்தியம்--இய‌ற்கை வைத்தியம்,

மூட்டு வலிக்கு இயற்கை வைத்தியம் ,,     மரம் வாழ்ந்த பின்பு பலகையாகிறது. சந்தன மரம் மட்டும் வாழ்ந்தபின்பும் சந்தனமாகவே இருக்கிறது. ஒப்பற்ற ம...

மூட்டு வலிக்கு இயற்கை வைத்தியம்
,,
    மரம் வாழ்ந்த பின்பு பலகையாகிறது. சந்தன மரம் மட்டும் வாழ்ந்தபின்பும் சந்தனமாகவே இருக்கிறது. ஒப்பற்ற மனித சமுதாயம் மட்டும் வாழும் போதே மூட்டுவலியால் முக்கி, முனங்கி இயக்கம் தடைப்பட்டு மூலையில் ஏன் முடங்க வேண்டும்.
   
    உடல் பருமன் அடைவது போல், இதயமும், மூட்டும் பெரிதாவதில்லை. எனவே அதிக உடல் எடையால் அடிக்கடி மூட்டு வலியால் அவதிப்படும் அன்பர்கள். (நெல்லி, வெண்பூசனி, கொள்ளு சூப், சாப்பிட வலி குறையும்) நரம்பு பிடிப்பால் சிதைந்து வரும் மூட்டு வலியை முருங்கையும் முடக்கற்றானும் சரி செய்யும்.
   
    முறையான தூக்கம், சாந்தி ஆசனம், தியானம், நல்ல இசை, வழிபாடு முதலியவைகளால் அருமையான மனநலம் பெற்று பிட்யட்டரி சுரப்பிகள் சிறப்பாக இயங்கச் செய்யலாம். குளிர்காலத்தில் உடல் சூடு குறைவதானலும் நரம்புகள் பிடிப்பும், தசை இறுக்கம் மிகுவதாலும் வேர்வை சுரப்பிகள், தோல் சுருங்குவதாலும் மூட்டுக்களின் தரையில் வேலை செய்தாலும், உட்கார்ந்தாலும், படுத்தாலும் மூட்டு வீக்கம், வலி, வளையும் தன்மை அதாவது முடக்குவதாகும் உண்டாகிறது.
   
     பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையால் இரத்த சோகையால் வந்த மூட்டு வலியை மாதுளையும், பேரீட்சையும் சரிசெய்யும்.கால்சியம் குறைவால், எலும்பு மஜ்ஜை குறைவால் ஏற்படும் வலியை கீரைச் சாறுகள். முந்திரி, கோஸ், முருங்கை, உணவில் சேர்த்து சரிசெய்யலாம். வாயுப் பிடிப்பால் விளைத்திடும் மூட்டு வலியை போக்க பண்டு சூப், வெங்காய பச்சடி அருந்த வேண்டும்.   
   
    மூட்டுவலி பெருக சில காரணி உணவுகள்:
   
    1. அதிய அளவு காபி, டீ அருந்துதல்
   
    2. அதிக அளவு எண்ணெய் உணவுகள் சாப்பிடுதல்
   
    3. கடல் உப்பு, உணவில் அதிகம் சேர்த்தல்
   
    4. வெள்ளைச் சீனி சேர்த்த இனிப்புகள், பானங்கள் எடுத்தல்
   
    5. அசைவ உணவு
   
    6. மொச்சை, பட்டாணி, தட்டைபயறு, உருளை
   
    7. பதப்படுத்திய இரசாயன குளிர்பானங்கள் எலும்புகளை உருக்கி சிதைத்து விடுகின்றன.
   
    8. மன உளைச்சல், மனபயம், மன சோர்வுகளால் தூக்கமின்மை ஏற்பட்டு பிட்ய+ட்டரி சுரப்பிகளின் இயக்கம் சீர்குலைந்தால் மூட்டு வலி அதிகரித்திட வாய்ப்புகள் உண்டு.
   
    எளிய தீர்வுகள்
    9. மூன்றுநாள் உபவாசம் (அ) பழச்சாறு நோன்பு 30 நாட்களுக்குள் மூட்டுவலி விரட்டிவிடும்.
   
    10. தினமும் மூன்று நிமிட முழங்கால் விரல்களில் கொடுக்கும் பயிற்சி.
   
    11. தினமும்; மூட்டுகளைச் சுற்றி ஈரத்துணியால் பட்டி போட்டால் 30 நாளில் குணமாகும்.
   
    12. இரவு நேர மண்பூச்சும், மண்பட்டியும் பகல் நேர மூட்டு வலியை போக்கும்.
   
    13. எண்ணெய் இல்லாத உணவுகள் எவ்விதமூட்டிவலியையும் போக்கும்.
   
    14. வெள்ளைபூண்டு, முடக்கற்றான், மூட்டு வலியை ஒட ஒட விரட்டும்.
   
    15. வஜ்ஜிராசனம், பத்மாசனம், உட்கடாசனம், தாளாசனமும் கருடாசனம்,
    பாதங்குஸ்தாசனம், படகு ஆசனம், விருச்சிகாசனம் முதலிய ஆசனங்கள் செய்தபின் சாந்தி ஆசனம் செய்து வந்தால் மூட்டுவலி உடலை விட்டு ஓடிவிடும்.
   
    16. காலை, மாலை, கனி உணவு உண்பார் கடும் மூட்டு வலியாயினும் கலங்கிடார்.
,மூட்டு,வலிக்கு,இயற்கை,வைத்தியம்

Related

மருத்துவ டிப்ஸ் 1710531932044325756

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item