முருங்கைக் கீரைக் கஞ்சி மாவு---மறந்து போன மருத்துவ உணவுகள்
முருங்கைக் கீரைக் கஞ்சி மாவு தேவையானவை: பாசிப் பருப்பு, துவரம் பருப்பு, கறுப்பு உளுந்து - தலா கால் கிலோ, பச்சரிசி - ஒரு கிலோ, ஏலக்காய், ச...

https://pettagum.blogspot.com/2012/04/blog-post_15.html
முருங்கைக் கீரைக் கஞ்சி மாவு
தேவையானவை: பாசிப் பருப்பு, துவரம் பருப்பு, கறுப்பு உளுந்து - தலா கால் கிலோ, பச்சரிசி - ஒரு கிலோ, ஏலக்காய், சீரகம், மிளகு - தலா 25 கிராம், முருங்கைக் கீரை - ஒரு கட்டு.
செய்முறை: முருங்கைக் கீரையை ஆய்ந்து சுத்தப்படுத்தி, விழுதாக அரைத்துக்கொள்ளவும். மற்ற அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகச் சேர்த்து, அதில் அரைத்த கீரை விழுதை சேர்த்துப் பிசையவும். இதை இரண்டு நாட்கள் வெயிலில் நன்றாகக் காயவைக்கவும். காய்ந்ததும் மாவாக அரைத்துக்கொள்ளலாம். தேவையானபோது மாவை எடுத்து உப்பு சேர்த்துக் கஞ்சியாகக் காய்ச்சிக் குடிக்கலாம். மாவாக அரைக்காமல், அரிசியை ஒன்றிரண்டாக உடைத்தோ அல்லது அப்படியே கஞ்சியாகக் காய்ச்சியும் குடிக்கலாம்.
மருத்துவப் பயன்: மூட்டு வலி, கழுத்து வலி குணமாகும். இரும்புச் சத்து நிறைந்து இருப்பதால், ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரித்து ரத்த சோகை சரியாகும். மாதவிடாய்ப் பிரச்னையைத் தீர்க்கும். இளைத்த உடலைத் தேற்றும்.

Post a Comment