மாதவிடாய்ச் சுழற்சி --பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும்,

குட் நைட்! இன்றைய விஞ்ஞான யுகத்திலும் பூப்பெய்தல்பற்றி பல சந்தேகங்களும் கேள்விகளும் பலருக்கு உண்டு. ஒரு பெண் 11-ல் இருந்து 15 வயதுக்கு...

குட் நைட்!

இன்றைய விஞ்ஞான யுகத்திலும் பூப்பெய்தல்பற்றி பல சந்தேகங்களும் கேள்விகளும் பலருக்கு உண்டு. ஒரு பெண் 11-ல் இருந்து 15 வயதுக்குள் பூப்பெய்தலாம். ஒரு பெண், குழந்தை பெறும் தகுதியை அடைவதன் முதல் புள்ளிதான் பூப்பெய்தல். அப்போது தொடங்கும் மாதவிடாயின் ஆரம்பம் ஏறக்குறைய அந்தப் பெண்ணின் 50 வயது வரை நீடிக்கும். இதை மாதவிடாய்ச் சுழற்சி என்பார்கள்.

 ஒரு பெண்ணின் 11-15 வயதில் தொடங்கும் இந்த மாதவிடாய், முதன்முதலில் எப்படி ஆரம்பிக்கிறது?

மூளையில் ஹைபோதாலமஸ் என்று ஒரு பகுதி உள்ளது. இது, தன் பக்கத்தில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியைத் தூண்டிவிடும். அந்தத் தூண்டுதல் காரணமாக பிட்யூட்டரி சுரப்பி ஃபாலிக்கிள் ஸ்டிமுலேட்டிங் (Follicle-stimulating hormone),  லூத்தின்ஜிங் (Luteinizing)ஆகிய இரண்டு ஹார்மோன்களைச் சுரக்கிறது.  ஒரு பெண்ணின் பாலியல் வளர்ச்சியையும் ரீபுரொடக்டிவ் காலத்தையும் (Reproductive Period)கட்டுப்படுத்துவதும் நிர்வகிப்பதும் இந்த இரண்டு ஹார்மோன்கள்தான். அது மட்டும் அல்ல... இந்த இரண்டும் புரொஜெஸ்டீரோன், (Progesterone)ஆக்சிடோஸின் (Oxytocin)  ஹார்மோன்களுடன் சேர்ந்து, மாதவிடாய்ச் சுழற்சியினை மாதாமாதம் சரியாக வருவது மாதிரி ஒழுங்குபடுத்தும்.

ஒரு பெண்ணுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் வருவதற்கு  இரண்டு வாரங்களுக்கு முன்பு, லூத்தின்ஜிங் ஹார்மோனின் உந்துதலால், அந்தப் பெண்ணின் கருமுட்டைப் பையில் ஒரே ஒரு கருமுட்டை மட்டும் பக்குவம் அடைந்து இருக்கும். அதன் பின்னர் லூத்தின்ஜிங் உந்துதலால் கருமுட்டைப்பையில் இருந்து பக்குவம் அடைந்த அந்தக் கருமுட்டை வெளியில் வந்து, ஃபலோப்பியன் குழாய் வழியாக பயணிக்கும். அப்போது இரண்டு விஷயங்கள் நடைபெறலாம். 

இந்தச் சமயத்தில் உடலுறவு நடைபெற்றால் அந்தக் கருமுட்டை ஆணுடைய உயிரணுவுடன் சேர்ந்து கருத்தரிக்கலாம் அல்லது கருத்தரிக்காமலே கருப்பைக்குள் வந்து சேரலாம். ஒருவேளை கருத்தரித்துவிட்டால், அந்தக் கருமுட்டை கருப்பையின் எண்டோமெட்ரியம் சுவரில் போய் ஒட்டிக்கொண்டுவிடும். அப்போது கருமுட்டைக்கு வேண்டிய சத்துணவைப் பெற எண்டோமெட்ரியம் பெரிதாகிக்கொண்டே போகும். இதன் காரணமாக சத்துணவும் ஆக்சிஜனும் கருமுட்டைக்குத் தாராளமாகக் கிடைக்கும். இது குழந்தைப் பிறப்பு வரைக்கும் நீடிக்கும்.

கருமுட்டையானது ஆணுடைய உயிரணுவுடன் சேர்ந்து கருவாக உருவாகவில்லை எனில், பெருத்த என்டோமெட்ரியமும் கருமுட்டையும் வெளியேற்றப்பட வேண்டிய பொருளாகிவிடும். ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரொஜெஸ்டீரோன் ஹார்மோன்களின் அளவும் குறைந்துவிடும். இந்தச்  சமயத்தில் ஆக்சிடோஸின் ஹார்மோன் தூண்டல் பெற்று, அதிக அளவு சுரந்து கருப்பையை இறுக்கும். இதனால்தான் மாதவிடாய் சமயத்தில் சில பெண்களுக்கு அடிவயிற்றில் வலி அதிகமாக இருக்கும்.  அப்போது பெரிதான என்டோமெட்ரியம் பிய்த்துக்கொண்டு அதன் துகள்களும் கருவாகாத முட்டையும் ரத்தத்துடன் சேர்ந்து வெளியேறும்.

பொதுவாக மாதவிலக்கு சுழற்சிக் காலத்தில் மூன்று முதல் ஆறு நாட்கள் வரை ரத்தப்போக்கு இருக்கலாம். சில பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு முன்பு மூட் ஸ்விங்ஸ் (Mood Swings) எனும் எரிச்சல் படர்ந்த மனநிலை இருந்துகொண்டே இருக்கும். அதாவது அந்தப் பெண்ணுக்கு எந்த உணர்வும் நிலையாக இருக்காது. இதற்கு ஹார்மோன்களின் மாற்றங்கள்தான் காரணம். இந்த நிலைக்கு ப்ரீமென்ச்சுரல் சின்ட்ரோம் (Premenstrual syndrome (PMS)  என்று பெயர். மாதவிடாய் வருவதற்கு முன்பு உள்ள இந்த மனநிலையானது மாதவிடாய் வந்ததும் பல பெண்களுக்கு இயல்பான நிலைக்கு வந்துவிடும். அப்படியும் குறையாமல் தீவிரமாக இருந்தால், இதற்கு அவசியம் சிகிச்சை தேவைப்படும்.

மாதவிடாய்ச் சுழற்சியின்போது, சில பெண்களுக்கு குறைவாக ரத்தப்போக்கு இருக்கலாம். சில பெண்களுக்கு அதிகமாக இருக்கலாம். சிலருக்கு அடிவயிறு வலி இருக்கும். பலருக்கு இல்லாமல் போகலாம். மாதவிடாய்ச் சுழற்சியானது 28 நாட்களுக்கு ஒரு முறை வர வேண்டும். இதில், இரண்டு நாட்கள் கூடவோ குறையவோ செய்யலாம். உலகில் எட்டு சதவிகிதப் பெண்களுக்குத்தான் மிகச் சரியாக 28 நாட்களுக்கு  ஒரு தடவை மாதவிடாய்ச் சுழற்சி வரும் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

எனவே, எத்தனை நாட்களுக்கு வருகிறது என்பதுபற்றி கவலைப்படாமல், மாதந்தோறும் சரியாக வருகிறதா என்பதுதான் இங்கே கவனிக்கப்படவேண்டிய விஷயம். மன அழுத்தம், வேலைப் பளு, உணவின் நிலைமை, மனக்கவலை... இவை எல்லாம் மாதவிடாய்ச் சுழற்சியை சீர்குலைக்கலாம். பூப்பெய்தலின் ஆரம்பத்தில் சில பெண்களுக்கு முதல் ஓரிரு வருடங்கள் மாதவிடாய்ச் சுழற்சியானது ஒழுங்கற்று இருக்கலாம். ரத்தப்போக்கிலும் பெரிய மாறுதல்கள் இருக்கலாம். ஆனால், 16 - 18 வயதில் இதில் நிலைத்த தன்மை ஏற்பட்டுவிடும். 45 வயதில் மீண்டும் ஒழுங்கற்ற நிலைமை ஏற்பட்டு, கடைசியில் ஓரிரு வருடங்கள் கழித்து மாதவிடாய்ச் சுழற்சியானது ஒட்டுமொத்தமாக நின்றே போய்விடும். இதனை மெனோபாஸ் என்போம்.

Related

பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் 4602034125689412009

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item