ஜவ்வரிசி ஊத்தப்பம் ஜம் ஜம்! -- வாசகிகள் கைமணம்
தேவையானவை: புழுங்கல் அரிசி - 4 கப், உளுந்து - 1 கப், ஜவ்வரிசி - கால் கிலோ, வெங்காயம் - கால் கிலோ, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்ப...


செய்முறை: முதல் நாளே புழுங்கல் அரிசி, உளுந்து இரண்டையும் தனித்தனியாக ஊற வைத்து, தோசை மாவு பதத்தில் அரைத்து, உப்பு சேர்த்துக் கலந்து வைத்துக் கொள்ளவும். அடுத்த நாள் ஜவ்வரிசியை ஊற வைத்து அரைத்த மாவுடன் சேர்க்கவும். அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் துருவல், கொத்தமல்லி ஆகியவற்றைச் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, அதில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து கொட்டி... கலந்து கொள்ளவும். தோசைக்கல்லை சூடாக்கி, மாவை ஊத்தப்பமாக வார்த்து, இரு புறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.
குறிப்பு:- ஜவ்வரிசி ஊத்தப்பம்: வறுத்து, கரகரப்பாகப் பொடித்த வேர்க்கடலை சேர்த்தால் க்ரிஸ்பியாக இருக்கும்.
Post a Comment