பனீர் டிலைட் -- வாசகிகள் கைமணம் !
பனீர் டிலைட் தேவையானவை: பனீர் - 200 கிராம், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தனியாத்தூள் - 1 டீஸ்பூன், சீரகத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், புளிக்காத...

தேவையானவை: பனீர் - 200 கிராம், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், தனியாத்தூள் - 1 டீஸ்பூன், சீரகத்தூள் - ஒன்றரை டீஸ்பூன், புளிக்காத தயிர் - ஒரு கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பனீரை விரல் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் பாதியளவு மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், தனியாத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு சேர்த்து பிசிறி ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். தயிரை ஒரு துணியில் வடிகட்டவும். தண்ணீர் நன்கு வடிந்தவுடன், மீதமுள்ள மிளகாய்த்தூளை தயிருடன் சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு, பனீர்க் கலவையை அதனுடன் சேர்த்து மெதுவாகப் பிசிறிப் பரிமாறவும்.
குறிப்பு:-பனீர் டிலைட்: இதனை தவாவில் சிறிது வதக்கினால் இன்னும் சுவையாக இருக்கும்.
Post a Comment