மஞ்சள் காமாலை நோய்---இய‌ற்கை வைத்தியம்

 பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது.  பித்தமானது பல காரணங்களால்  மிகுதியாகி  ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்...

 பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது.  பித்தமானது பல காரணங்களால்  மிகுதியாகி  ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது.  உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும் தூக்கமின்மையாலும் வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி, காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை நோயைத் தோற்றுவிக்கிறது.
பித்தமானது நஞ்சுபோல் உடலில் எங்கும் வியாபிக்கக்கூடிய தன்மையுள்ளது.அதோடு மட்டுமல்லாமல், நவீன உலகத்தில் உணவுப் பழக்கங்களாலும், மிதமிஞ்சிய உணவுகளாலும், பாமாயில் கலக்கப்பட்ட எண்ணெய்களாலும் ஒருதடவை சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைப்படும்போது மாறி மாறி சூடுபண்ணி பல நாட்கள் சாப்பிடுவதாலும், உண்ட உணவானது உடலில் புளிப்புத் தன்மையை உண்டாக்கி செரியாமை ஏற்பட்டு குடலின் பித்தமானது சளியோடு கலந்து ரத்தத்தில் சேர்ந்துவிடுகிறது.  
 இப்படிப்பட்ட உணவுப் பழக்கங்களால், மஞ்சள்காமாலை நோய்த்தொற்று ஏற்படுகிறது.மேலும், தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை மறந்ததாலும் நரம்புகள் சூடாகி பித்தம் அதிகரித்து மஞ்சள் காமாலை நோய் உண்டாகிறது.
 பித்தமானது அலர்ஜியாகும்போது காமாலை நோய்க் கிருமி தோன்றி, முதலில் கல்லீரலைப் பாதித்து, கண்களில் மஞ்சள் நிறம் தோற்று விக்கிறது.  சிறுநீர் மஞ்சளாக வெளியேறுகிறது.  பொதுவாக மஞ்சள்காமாலைக்கு பித்தம் அதிகரிப்புதான் முக்கிய காரணமாகிறது.மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர்  சிறுநீர், மலம் கழித்த இடத்தை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவர்களையும் நோய்த் தொற்ற வாய்ப்புண்டு. 
ஆகையால், பாடசாலை முதல், கல்லூரி வரை  ஏதேனும் ஒரு மாணவருக்கு மஞ்சள்காமாலை நோய் இருந்தால் அது  மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடுகிறது.பொதுவாக இப்படிப்பட்ட பித்த அலர்ஜியால் உண்டாகும் மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருத்துவத்தில் கீழாநெல்லி என்ற மூலிகையை அதிகம் பயன்படுத்துவார்கள்.
கீழாநெல்லி   - ஒரு கைப்பிடி
சீரகம்        -  1 ஸ்பூன்

இரண்டையும் நீர்விட்டு அரைத்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் கொடுத்து வந்தால் பித்தம் தணிந்து, காமாலை நோய்த்தொற்று கிருமிகள் அழியும். 

கீழாநெல்லி, சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் இவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, சர்க்கரை கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் மெல்ல மெல்ல முழுமையாக குணமடையலாம்.

கீழாநெல்லி, சீரகம், பூவரச பழுத்த இலை, கரிசலாங்கண்ணி (வயல் வெளியில் வெள்ளைப்பூக்கள் நிறைந்து காதில் அணியும் கம்மல் போன்று இருக்கும்) இவை அனைத்தும் 3 கிராம் அளவிற்கு எடுத்துக் கசாயம் செய்து காலை, மாலை வேளைகளில்  சாப்பிடும் முன் அருந்தினால் காமாலை நோய் குணமாகும்.

காய்ச்சல், குளிர்சுரம் வந்தால், பித்தத்தை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

பித்தத்தைத் தணிக்க, காய்கள், கீரைகள், பழவகைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
 வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

நாள்பட்ட உணவுகளை சூடாக்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

மழைக்காலங்களில் நீரை கொதிக்க வைத்து ஆறியபின் அருந்தவேண்டும்.

புளி, உப்பு, காரம் குறைத்து சாப்பிட வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களையும், அதிக எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருள்களையும் தவிர்க்க வேண்டும்.

· நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.

Related

மருத்துவ டிப்ஸ் 3982150076222320691

Post a Comment

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement


Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் கை மருந்துகள் சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மன நலம்! முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item