தாய்ப் பால் சுரப்பை அதிகரிக்கும் பூண்டு, கருவாடு!--இய‌ற்கை வைத்தியம்,

பிறந்த குழந்தையின் முதல் உணவு தாய்பால். தாயின் உடல் நிலை காரணமாகவும், சத்தான உணவு உண்ணாத காரணத்தினாலும் ஒரு சிலருக்கு தாய்பால் சுரப்பதில் பா...

பிறந்த குழந்தையின் முதல் உணவு தாய்பால். தாயின் உடல் நிலை காரணமாகவும், சத்தான உணவு உண்ணாத காரணத்தினாலும் ஒரு சிலருக்கு தாய்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும். இதற்காக உடனே பசும்பாலை காய்ச்சி குழந்தைக்கு கொடுக்கத் தொடங்கி விடக்கூடாது. ஏனெனில் புட்டிப்பால் ருசிக்கு பழகிய குழந்தைகள் தாய்பால் குடிக்க முரண்டு பிடிக்கத் தொடங்கிவிடும்.அதேபோல் தாய்மார்களும் நமக்கு வேலை லேசாகிவிட்டது என்று தாய்பால் பற்றி கவலைப்படாமல் வேறு வேலை பார்க்கத் தொடங்கிவிடுவர். இது தவறாத பழக்கமாகும். தாய்ப் பாலில் இருந்துதான் குழந்தைக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கின்றன. எனவேதான் 6 மாதம் வரை குழந்தைக்கு தாய்பால் அவசியம் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தாய்ப் பால் சரியாக சுரக்காத தாய்க்கு வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். அதனைக் கையாண்டால் குழந்தைக்குத் தேவையான அளவு தாய்ப்பால் சுரக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக வளர்வதோடு தாய்க்கும் நன்மை ஏற்படும். வெள்ளைப் பூண்டு, கருப்பட்டி பிரசவித்த பெண்களுக்கு வெள்ளைப் பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் வெல்லக்கருப்பட்டியை சாப்பிட கொடுப்பார்கள். இதற்கான காரணம் உடல் ஆரோக்கியத்திற்காக மட்டுமல்லாது பிறந்த குழந்தையின் நலனை கருத்தில் கொண்டுதான். ஏனெனில் வெள்ளைப் பூண்டு அதிகம் சாப்பிட்டால் தாய்பால் அதிகம் சுரக்கும். மேலும் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுவதற்கும் வெள்ளைப் பூண்டு சிறந்தது. அதேபோல் கருப்பட்டியில் உள்ள இரும்புச் சத்து தாயின் மூலம் தாய்பால் வழியாக குழந்தைக்குப் போய் சேரும். அதேபோல் பசும் பாலில் பூண்டு, சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் சுரக்கும். .கோவை இலையை வெள்ளைப் பூண்டுடன் நெய்யில் வதக்கி காலையில் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும். மிளகு ரசம், சுரைக்காய் கூட்டு காரமாய் சாப்பிட்டால் பிரசவித்த வயிறுக்கு ஒத்துக்கொள்ளாது. எனவே மிளகாய் சேர்க்காமல் மிளகு சேர்த்து பத்திய உணவு தயாரித்து கொடுப்பார்கள். அது அற்புத சுவையோடு தாய்க்கும், சேய்க்கும் ஏற்ற உணவாகும். மிளகும், கொடாம்புளியும் சேர்த்த ரசம், சுரைக்காய் கூட்டு சேர்த்து உண்பது தாய்பாலை அதிகம் சுரக்கச் செய்யும். அதேபோல் மீன், கருவாடு போன்றவைகளை காரம் குறைவாக வைத்து சமைத்துக் கொடுப்பார்கள். இது தாய்ப் பாலை அதிகம் சுரக்கச் செய்யும். மூலிகை கசாயம் அமுக்கிராங் கிழங்கு இலையினை கஷாயம் காய்ச்சி பருகினால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன், தேன் கலந்து சாப்பிட்டுவர தாய்ப்பால் பெருகும். வெற்றிலைகளை நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக் கட்ட தாய்ப்பால் சுரக்கும். அதேபோல் தக்காளி இலைகளை ,காடியில் அரைத்து மார்பில் கட்டிவர தாய்ப்பால் பெருகும். சத்தான முருங்கைக் கீரை முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகரிக்கும். அதேபோல் கல்யாண முருங்கை இலையும் பாசி பருப்பும் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் தாய்ப் பால் அதிகம் சுரக்கும். ஆலம் விழுதின் துளிரையும் விதையையும் அரைத்து 5 கிராம் காலையில் மட்டும் பாலில் கொடுத்துவரத் தாய்ப்பால் பெருகும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 8575182156653450333

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item