காரச் சீடை -- சமையல் குறிப்புகள்
தேவையான பொருள்கள்: அரிசி மாவு – 2 1/2 கப் உளுத்தம் மாவு – 1/2 கப் பச்சை மிளகாய் – 10 எள் – 1 டீஸ்பூன் தேங்காய்ப் பால் பெருங்காயம் வெண்ணை உப...

https://pettagum.blogspot.com/2012/01/blog-post_3033.html
தேவையான பொருள்கள்:
அரிசி மாவு – 2 1/2 கப் உளுத்தம் மாவு – 1/2 கப் பச்சை மிளகாய் – 10 எள் – 1 டீஸ்பூன் தேங்காய்ப் பால் பெருங்காயம் வெண்ணை உப்பு எண்ணெய்
செய்முறை:
- பச்சை மிளகாய், உப்பு, காயம் இவற்றை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
- அரிசி மாவையும் வறுத்து அரைத்த உளுத்தம் மாவையும் நைசாகச் சலித்துக் கொள்ளவும்.
- அதில் அரைத்த விழுது, வெண்ணை சேர்த்து நன்றாக சீராகப் பிசிறிக் கொள்ளவும்.
- அதோடு எள் சேர்த்து, சிறுகச் சிறுக தேங்காய்ப் பால் விட்டு சீடைகளாக உருட்டும் பதத்திற்கு மாவைப் பிசையவும்.
- மாவை சீடை உருண்டைகளாக உருட்டி ஒன்றிரண்டு மணி நேரம் அப்படியே வைக்கவும்.
- பின்னர் சூடான எண்ணெயில் வாணலி கொள்ளும் வரையில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். எடுக்கும்போது சலசலவென சத்தம் கேட்க வேண்டும்.
Post a Comment