சமையலறை சந்தேகங்கள்---கேள்வி-பதில்
1.பனீர்-சீஸ் இரண்டுக்கும் என்ன வேறுபாடு? எப்படி உபயோகிப்படுத்துவது? இரண்டுமே பாலை திரித்து தான் தயாரிக்கப்படுகின்றன. பாலைக்கொதிக்க வைத்து...

1.பனீர்-சீஸ் இரண்டுக்கும் என்ன வேறுபாடு? எப்படி உபயோகிப்படுத்துவது? இரண்டுமே பாலை திரித்து தான் தயாரிக்கப்படுகின்றன. பாலைக்கொதிக்க வைத்து எலுமிச்சை சாறு, வினிகர், தயிர் போன்றவற்றை சேர்த்து திரித்து பனீர் தயாரிக்கப்படுகிறது. வேறுபட்ட மல்டி ஆர்கானிஸம், பாக்டீரியா உபயோகித்து பாலை திரித்து சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு பிராஸஸ் செய்து சீஸின், டெக்ஸ்சர் மற்றும் மணம் நிர்ணயிக்கப்படுகிறது. பனீரை துருவி பரோட்டாவாக செய்யலாம். க்யூபுகளாக வெட்டி, பாலக்கீரையுடன் உபயோகிக்கலாம். கெட்டி தயிர் மற்றும் மசாலாப்பொடிகளுடன் ஊற வைத்து மைக்ரோ வேவ் அவனில் டிக்காவாக க்ரில் செய்யலாம். எண்ணெயில் பொரிக்கலாம். சீஸ்களை பீட்ஸாவின் மேல் போட்டு மைக்ரோவேவ் அவனில் பேக் செய்யலாம். (உதாரணம் மொரைல்லா சீஸ்) சில வகை சீஸ்களை துருவி, பிரட்டுடன் நேரிடையாக டோஸ்ட் செய்யலாம். (உதாரணம்: காட்டேஜ் சீஸ்) மேலும் சில வகை சீஸ்களை, பிரட் ஸாண்ட்விச்சில் பரவலாக தடவி உபயோகிக்கலாம். (உதாரணம் க்ரீம் சீஸ்)
2. குறைவான துவரம் பருப்பில் மணமான சாம்பார் செய்யலாமா? வாணலியில் ஒரு கப் தனியா, அரை கப் துவரம் பருப்பு, வர மிளகாய் சேர்த்து வறுக்கவும், அதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பூண்டு (தேவையானால்) சேர்த்து மிக்ஸியில் கெட்டியான விழுதாக அரைத்துக்கொள்ளவும். புளிநீர் + சாம்பார் பொடி+ உப்பு+ காய்கள் கொதிக்கையில் அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும். தேவையானால் தேங்காய் துருவலும் சேர்த்து அரைக்கலாம். சாம்பார் ருசியாக இருக்கும். துவரம் பருப்பு, வரமிளகாய், கொள்ளு, உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடியாக அரைத்து வைத்து கொள்ளவும். துவரம் பருப்பு விலை அதிகமாக இருக்கும்போது குழம்பில் நான்கு டேபிள் ஸ்பூன் போட்டு கொதிக்கவிடலாம்.
3. என் பாட்டி சின்ன வெங்காயம், தக்காளி, புளி மிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்து தக்காளி வெங்காய தொக்கு செய்வார்கள். வாணலியில் செய்யும் பாது ஊறுகாய் கைகளில் தெறித்து புண்ணாகிவிடும். மைக்ரோவேவ் அவனில் ஊறுகாய் மேலே தெறிக்காமல் எப்படி செய்வது?
தக்காளியை மிக்ஸியில் அரைத்து உலோக வடிகட்டியில் வடிகட்டவும். வெங்காயம், பூண்டு, இவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். மைக்ரோ ப்ரூப் கண்ணாடி பாத்திரத்தில் எண்ணெயில் கடுகை போட்டு ஹை பவரில் இரண்டு நிமிடங்கள் வைக்கவும். இதில் சிவப்பு மிளகாய்த்துள், மஞ்சள் தூள், வெந்தயப்பொடி, தக்காளி விழுது, வெங்காயம், பூண்டு விழுது, பெருங்காயம், உப்பு சேர்த்து மீடியம் ஹை பவரில் பத்து நிமிடங்கள் வைக்கவும். (இடையில் இரண்டு முறை வெளியே எடுத்து கலந்து விடவும்). தொக்கு, சரியான பதத்தில் இருக்கிறதா என்று பார்த்து விட்டு, தேவையானால், மேலும் மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் மீடியம் பவரில் வைக்கவும், மைக்ரோ அவனில் செய்யும்போது தொக்கு மேலே தெறிக்காது. உங்களது பாட்டியின் பக்குவத்தில் மணமணக்கும் தக்காளி வெங்காயத்தொக்கு தயார்.
4.மைக்ரோவேவ் அவனில் சமைக்கும்போது மூடி போட்ட பாத்திரத்தில் தான் செய்ய வேண்டுமா?
தாளிக்கும்போது, பாத்திரத்தை மூடி வைத்தால், வெளியே தெறிப்பதை தவிர்க்கலாம். ஈரத்தன்னை நீங்காமல் இருக்க பாத்திரத்தை மூடி வைத்தும் சமைக்கலாம். திரவங்களை சூடி செய்யும்போது பாத்திரத்தில் பாதி அளவு திரவங்களை நிரப்பி, பாத்திரங்களை திறந்து உபயோகிக்கவும். இல்லாவிடில் பாத்திரம் விரியவோ பொங்கி வழியவோ வாய்ப்புண்டு.
Post a Comment