கரும்புள்ளிகள் கலங்க வைக்குதா? கவலைப் படாதீங்க!--அழகு குறிப்புகள்.

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் சில சமயங்களில் வெளியில் தலைகாட்ட முடியாமல் செய்துவிடும். அதுவும் சிவந்த நிறத்தை உடையவர்களுக்கு புள்ளி புள்...

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் சில சமயங்களில் வெளியில் தலைகாட்ட முடியாமல் செய்துவிடும். அதுவும் சிவந்த நிறத்தை உடையவர்களுக்கு புள்ளி புள்ளியாக இருப்பது முக அழகையே மாற்றிவிடும். ஊட்டச் சத்துக்குறைவு, மலச்சிக்கல் போன்ற காரணங்களினால் கூட முகத்தில் கரும்புள்ளிகள் தோன்ற காரணமாகின்றன என்கின்றனர் அழகியல் நிபுணர்கள். எனவே சரிவிகித ஊட்டச்சத்துள்ள உணவுகளை அதிக உண்ணவேண்டும் என்பது அவர்களின் அறிவுரை. அதோடு நார்ச்சத்துள்ள உணவுகளையும் அதிகம் சேர்த்துக்கொண்டால் கரும்புள்ளிகள் ஏற்படுவதை தவிர்க்கலாம் என்பது அவர்களின் அறிவுரை. முகத்தில் ஏற்பட்டுள்ள கரும்புள்ளிகளை போக்க அழகியல் நிபுணர்களின் ஆலோசனைகள் உங்களுக்காக. ஊறவைத்த பாதம் பருப்பு பாதாம் பருப்பை ஊறவைத்து தோல் நீக்கி மைய அரைக்க வேண்டும். அதனுடன் தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து கலந்து முகத்தில் பூசி ஊறவைக்க வேண்டும். பதினைந்து நிமிடங்கள் கழித்து வெது வெதுப்பான நீரில் கழுவ கரும்புள்ளிகள் மறையும். ஊறவைத்த பாதாம் பருப்புடன் ரோஜா இதழ் கலந்து அரைத்து அந்த கலவையை முகத்தில் பூசி குளிக்க கரும்புள்ளிகள் மறையும். தேனும், பாலும் தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும் முகம் பொலிவு தரும். மூன்று டீஸ்பூன் தேனுடன், ஒரு டீஸ்பூன் லவங்கப்பட்டை கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும். கோதுமை தவிட்டுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறையத் தொடங்கும். வாழைப்பழத்தை மசித்து அதனுடன் பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் ஊறவைத்து வெது வெதுப்பான நீரில் கழுவ முகம் பொலிவு பெறும். எலுமிச்சை சாறு முருங்கை இலைச்சாறு, எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் கலந்து தடவினால் கரும்புள்ளிகள் நீங்கும். அதேபோல் பப்பாளி பழத்தை மசித்து அதனுடன் தேன் கலந்து தடவினாலும் நல்ல பலன் கிடைக்கும். வெள்ளரிச்சாறு, எலுமிச்சைசாறு, புதினாசாறு ஆகியவற்றை சம அளவு கலந்து கரும்புள்ளிகள் மீது பூச அவை மறைந்து விடும். முல்தானி மெட்டி பேக் கரும்புள்ளியை போக்குவதில் முல்தானி மெட்டிக்கு முக்கிய பங்குண்டு. முல்தானி மெட்டியுடன் வெள்ளரிச்சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் பேஷ்பேக் போல போடவேண்டும். நன்றாக காயவிட்டு பின் கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும். வெள்ளரிக்காய் பேக் தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்றாக அரைத்து முகத்தில் பூசி ஊறவைத்து பின் குளிக்க வேண்டும். அடிக்கடி இவ்வாறு செய்தவர கரும்புள்ளிகள் மறையும். உருளைக் கிழங்கு சாற்றை தடவி பத்து நிமிடம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் மறையும். வெந்தையக்கீரையை அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து இளம் சூடான நீரில் கழுவ நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும். சந்தனத்தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்தபின் தண்ணீரால் கழுவவேண்டும். வாரம் ஒருமுறை இதை செய்து வர கரும்புள்ளிகள் நிறம்மாறிவிடும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 2446488987915768828

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item