பப்பாளி ஜாம் -- சமையல் குறிப்புகள்
பப்பாளி ஜாம் தேவையான பொருட்கள்: பாப்பாளிப் பழ விழுது-1 கப், சர்க்கரை-1 கப், மிக்ஸ்ட்டு ஃப்ரூட் எசன்ஸ்-1 டீஸ்பூன், ராஸ்பெர்ரி ரெட்- 2 சிட்டி...
https://pettagum.blogspot.com/2012/02/blog-post_6924.html
பப்பாளி ஜாம்
தேவையான பொருட்கள்: பாப்பாளிப் பழ விழுது-1 கப், சர்க்கரை-1 கப், மிக்ஸ்ட்டு ஃப்ரூட் எசன்ஸ்-1 டீஸ்பூன், ராஸ்பெர்ரி ரெட்- 2 சிட்டிகை.
செய்முறை: பப்பாளியைத் தோல், விதை நீக்கி மிக்ஸியில் விழுதாக எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இந்தப் பப்பாளி விழுதைப் போட்டு, அவனில் 3 நிமிடங்கள் ஹையில் வைத்தெடுத்து, சர்க்கரை மற்றும், எசன்ஸ், ஃபுட்கலர் சேர்த்து மூடி, மீடியம் ஹையில் 5 நிமிடங்கள் வைத்துப் பிறகு திறந்து 3 நிமிடங்கள் மீடியம் ஹையில் வைக்கவும். ஸ்டேன்டிங் டைம் 2 நிமிடங்கள். பப்பாளி ஜாமை ஒரு தட்டில் போட்டுச் சாய்த்தால், லேசாகக் கீழே இறங்க வேண்டும். அதுதான் சரியான பதம்.
Post a Comment