சமையல் குறிப்புகள்! சீஸ் காலிப்ளவர் பரோட்டா
சீஸ் காலிப்ளவர் பரோட்டா தேவையான பொருட்கள் கோதுமை மாவு - 2 கப் சீஸ் - 100 கிராம் காலிப்ளவர் - 1 சிறியது மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன் மஞ்சள்...

https://pettagum.blogspot.com/2011/07/blog-post_8902.html
சீஸ் காலிப்ளவர் பரோட்டா
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - 2 கப்
சீஸ் - 100 கிராம்
காலிப்ளவர் - 1 சிறியது
மிளகாய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
வெள்ளை வெங்காயம் - 4
எண்ணெய், உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 2
செய்முறை
கோதுமை மாவுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து எண்ணெய் விட்டு நன்றாக நைசான சப்பாத்திமாவைப் போல் பிசைந்து, ஈரத்துணியால் மூடி 1/2 மணி நேரம் ஊறவிடவும்.
காலிப்ளவரையும், சீஸையும் காரட் துருவியில் துருவிக் கொள்ளவும்.
இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயுடன் உப்பும் சேர்த்து கலந்து கொள்ளவும். பிடித்தமானால் அரிந்த கொத்துமல்லியும் கலந்து கொள்ளலாம்.
கோதுமை மாவை உருண்டைகளாக உருட்டி, கெட்டியான சின்ன சப்பாத்திகளாகச் செய்து கொள்ளவும்.
ஒரு சப்பாத்தியை எடுத்து காலிப்ளவர் கலவையை நிரவி இன்னொரு சப்பாத்தியை அதன் மேல் போட்டு மெதுவாக அழுத்திவிட்டு, மாவில் பிரட்டி பெரியதாக இட்டுக் கொள்ளவும்.
இது போல் மற்ற சப்பாத்திகளையும் பரோட்டாக்களாக செய்த பிறகு ஒவ்வொன்றாக சூடான தவாவில் போட்டு இரு புறமும் நெய்விட்டு வேக விட்டு எடுக்கவும்.
---------------------------------------------------------------------
Post a Comment