சமையல் குறிப்புகள்! மைக்ரோவேவில் கேரட் அல்வா
மைக்ரோவேவில் கேரட் அல்வா தேவையான பொருட்கள் கேரட் - 1/4 கிலோ பால்கோவா - 200 கிராம் சர்க்கரை - 100 கிராம் பால் - 150 மி.லி. நெய் - தேவையான அள...

https://pettagum.blogspot.com/2011/07/blog-post_282.html
மைக்ரோவேவில் கேரட் அல்வா
தேவையான பொருட்கள்
கேரட் - 1/4 கிலோ
பால்கோவா - 200 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
பால் - 150 மி.லி.
நெய் - தேவையான அளவு
பாதாம் பருப்பு - சிறிதளவு
முந்திரி - சிறிதளவு
திராட்சை - சிறிதளவு
செய்முறை
கேரட்டை தோல் சீவி பூப் போல துருவிக் கொள்ளவும்.
சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடித்து வைக்கவும்.
பால்கோவாவை உதிர்த்து வைக்கவும்.
ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் கேரட் துருவலுடன் பால் சேர்த்து மைக்ரோ ஹையில் பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். பாத்திரத்தை மூடக் கூடாது. நடுவில் ஒரு முறை கிளறி விடவும்.
வெளியில் எடுத்து கேரட் வெந்து விட்டதா என்று பார்த்து விட்டு, பொடித்த சர்க்கரை சேர்த்து கிளறி விட்டு பாத்திரத்தை மூடாமல் மீண்டும் மைக்ரோ ஹையில் பதினைந்து நிமிடங்கள் வைக்கவும். இடையில் இரண்டு முறை கிளறி விடவும்.
பிறகு உதிர்த்து வைத்த பால் கோவா, நான்கு ஸ்பூன் நெய், பாதாம் பருப்பு, முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கிளறி விட்டு மைக்ரோ ஹையில் இரண்டு நிமிடங்கள் வைக்கவும்.
சுவையான கேரட் அல்வா ரெடி
Post a Comment