சமையல் குறிப்புகள்! பருப்பு கச்சோரி
பருப்பு கச்சோரி தேவையான பொருட்கள் கோதுமை மாவு, மைதா - 200 கிராம் பால் (அல்லது) தயிர் - 50 கிராம் உப்பு - தேவைக்கேற்ப உளுத்தம் பருப்பு - 100...

https://pettagum.blogspot.com/2011/07/blog-post_178.html
பருப்பு கச்சோரி
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு, மைதா - 200 கிராம்
பால் (அல்லது) தயிர் - 50 கிராம்
உப்பு - தேவைக்கேற்ப
உளுத்தம் பருப்பு - 100 கிராம்
மிளகு, தனியா - சிறிது
சீரகம், மிளகாய் வற்றல் - 1/2 டீஸ்பூன்
தனியா பொடி - 5 கிராம் இவற்றை ஒன்றாக பொடித்து கொள்ளவும்
நெய் - 50 கிராம்
செய்முறை
கோதுமை மாவு, மைதா, உப்பு இவற்றை பால் (அ) தயிர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
குறைந்த பட்சம் 2 மணி நேரம் ஊற வைக்கவும். உருண்டைக்களாக்கி கொள்ளவும்.
உளுத்தம் பருப்பை ஊறவைத்து கெட்டியாக அரைக்கவும்.
பொடி செய்த மசாலா பொடிகளையும், உப்பையும் இதில் சேர்க்கவும்.
இந்த உளுத்தம் பருப்புக் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி மேல் மாவு உருண்டைக்குள் வைத்து, சிறிய சிறிய பூரிகளாக மெல்லியதாக இடவும்.
சூடான எண்ணையில் பூரி மாதிரி பொரிக்கவும். இப்போது பருப்பு கச்சோரி தயார்.
இதை சாஸ§டனோ, இனிப்பு சட்னி, புதினா சட்னியுடனோ பரிமாறலாம்.
------------------------------------------------------------------------
Post a Comment