செட்டிநாடு உணவு -சின்ன வெங்காயக் கோஸ்
சின்ன வெங்காயக் கோஸ் தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி தக்காளி - 1 அரைக்க பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன் வரமிளகாய் - 6 சோம்பு - 1...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_6871.html
சின்ன வெங்காயக் கோஸ்
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - ஒரு கைப்பிடி
தக்காளி - 1
அரைக்க
பொட்டுக்கடலை - 1 டீஸ்பூன்
வரமிளகாய் - 6
சோம்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
தாளிக்க
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
செய்முறை
வெங்காயத்தை உரித்து பொடியாக நறுக்கி வைக்கவும்.
தக்காளியையும் பொடியாக நறுக்கவும்.
எண்ணெயைக் காய வைத்து வெங்காயத்தைக் கொட்டி நன்கு சுருள வதக்கி, தக்காளியையும் சேர்த்து வதக்கவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை நன்கு விழுதாக அரைத்து, தேவையான தண்ணீர் சேர்த்துக் கரைத்து ஊற்றவும்.
இந்த சின்ன வெங்காய கோஸ், இட்லி, தோசைக்கு எடுப்பான ஜோடி!
---------------------------------------------------------
Post a Comment