சமையல் குறிப்புகள்! அருநெல்லி ரசம்
அருநெல்லி ரசம் தேவையான பொருட்கள் நன்கு முற்றிய அருநெல்லி (கொட்டை நீக்கியது) - அரை கப் பெரிய தக்காளி - 1 குழைய வேக வைத்த துவரம்பருப்பு - 1/2...

https://pettagum.blogspot.com/2011/07/blog-post_6153.html
அருநெல்லி ரசம்
தேவையான பொருட்கள்
நன்கு முற்றிய அருநெல்லி (கொட்டை நீக்கியது) - அரை கப்
பெரிய தக்காளி - 1
குழைய வேக வைத்த துவரம்பருப்பு - 1/2 கப்
பச்சை மிளகாய் (கீறியது) - 4
இஞ்சி - ஒரு அங்குல துண்டு
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
மஞ்சள்பொடி - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
கல் உப்பு - ருசிக்கேற்ப
நறுக்கிய கொத்தமல்லி - ஒரு டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்
செய்முறை
சப்பாத்தி இடும் கட்டையால் அருநெல்லிக் காய்களை நன்கு நசுக்கவும்.
தக்காளியைச் சிறு துண்டுகளாக நறுக்கவும். இவை இரண்டையும் ஒரு கப் தண்ணீரில் சேர்த்து, கறிவேப்பிலை, பெருங்காயம், மஞ்சள் பொடி, கல் உப்பு, பச்சை மிளகாய், நசுக்கிய இஞ்சியுடன் சேர்த்துக் கொதிக்க விடவும்.
‘கம்’ மென்ற வாசனை வரும்போது துவரம்பருப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொதிக்கும் ரசத்தில் விடவும். மஞ்சள் நிறத்தில் நுரை கட்டி வரும்போது இறக்கி, நெய்யில் கடுகு, சீரகம், தேவைப்பட்டால் பாதி வற்றல் மிளகாய் தாளித்து, கொத்துமல்லித் தழை சேர்க்கவும்.
கடைசியாக எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். அபாரமாக இருக்கும் இந்த அருநெல்லி ரசம்.
குறிப்பு
ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்க்க, ரசத்தின் ருசி கூடும். எலுமிச்சம்பழம் இல்லையெனில், ரசம் கொதிக்கும் போது ஒரு டீஸ்பூன் புளிக்கரைசல் சேர்க்கலாம்.
---------------------------------------------------------------------
Post a Comment