செட்டிநாடு உணவு-வரமிளகாய் துவையல்
வரமிளகாய் துவையல் தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் - 1 கப் புது மிளகாய் - 10 நாட்டுத் தக்காளி - 3 உப்பு - 1 டீஸ்பூன் தாளிக்க கடுகு, உளுத்த...

https://pettagum.blogspot.com/2011/07/blog-post_3974.html
வரமிளகாய் துவையல்
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 1 கப்
புது மிளகாய் - 10
நாட்டுத் தக்காளி - 3
உப்பு - 1 டீஸ்பூன்
தாளிக்க
கடுகு, உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
நல்லெண்ணெய் - 1/4 கப்
செய்முறை
வெங்காயத்தை உரித்து, தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, வெங்காயத்தைக் கொட்டி வதக்கவும். மிளகாயையும் கொட்டி வதக்கவும். (வெங்காயம் போட்டு வதக்கிய பின், மிளகாயைச் சேர்த்தால் தான் துவையல் நல்ல நிறமாக இருக்கும்). பிறகு தக்காளியையும் சேர்த்து வதக்கி, உப்பு சேர்த்து அரைக்கவும்.
ரோசாப்பூ துவையலுக்கு சொன்னது போலவே எண்ணெயில் பொரித்துக் கொட்டிக் கிளறி விடவும்.
------------------------------------------------------------------------
Post a Comment