சமையல் குறிப்புகள்! காரப்பொடி மீன் குழம்பு
காரப்பொடி மீன் குழம்பு செட்டிநாடு சமையல் கலை தனிமவுசு கொண்டது. கமகமக்கும் மணமும், சுவையும் மிக்க அந்த சமையல் முறையில் கிராமத்து மணம் கமழும...
https://pettagum.blogspot.com/2011/07/blog-post_7162.html
காரப்பொடி மீன் குழம்பு
செட்டிநாடு சமையல் கலை தனிமவுசு கொண்டது. கமகமக்கும் மணமும், சுவையும் மிக்க அந்த சமையல் முறையில் கிராமத்து மணம் கமழும் காரப்பொடி மீன் குழம்பும் தயாரித்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
காரப்பொடி மீன் - 1/2 கிலோ
காய்ந்த மிளகாய் - 8
தனியா - ஒரு கையளவு
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
புளி - எலுமிச்சம் பழ அளவு
தேங்காய் - 1/4 மூடி
மஞ்சள் - 1/2 டீஸ்பூன்
வெங்காயம், தக்காளி - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
உப்பு - தேவையான அளவு
எண்ணை - 1/2 குழிக்கரண்டி
கடுகு, கறிவேப்பிலை - தாளிக்கும் அளவு
செய்முறை
* மீனை தலை, வால் நீக்கி, குடல் போக நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.
* மிளகாய், தனியா, மிளகு, சீரகம் இவற்றை வறுத்து அரைக்கவும். அதனுடன் தேங்காயை சேர்த்து அரைத்து மசாலா ஆக்கவும்.
* கடாயில் எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய வெங்காயம், தக்காளி, கீறிய மிளகாய் சேர்த்து வதக்கவும்.
* புளிக்கரைசல் ஊற்றி அரைத்த மசாலா சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
* மசாலா கொதித்ததும், மீனைச் சேர்த்து குறைந்த தீயில் சிறிது நேரம் வைத்திருந்து இறக்கிவிடவும்.
*******************************************************************************
Post a Comment