செட்டிநாடு உணவு-ரோசாப்பூ துவையல்
ரோசாப்பூ துவையல் தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் - 1 கப் புது வரமிளகாய் - 10 புதுப் புளி - நெல்லிக்காய் அளவு உப்பு - 1 டீஸ்பூன் தாளிக்க க...

https://pettagum.blogspot.com/2011/07/blog-post_3734.html
ரோசாப்பூ துவையல்
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 1 கப்
புது வரமிளகாய் - 10
புதுப் புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - 1 டீஸ்பூன்
தாளிக்க
கடுகு, உளுத்தம்பருப்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
நல்லெண்ணெய் - 1/4 கப்
செய்முறை
உரித்த வெங்காயம், மிளகாய், புளி, உப்பு எல்லாவற்றையும் கெட்டியாக தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்கவும். இருப்புச் சட்டியில் நல்லெண்ணெயைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை போட்டு கருகாமல் பொரித்துத் துவையலில் சூட்டோடு கொட்டிக் கிளறிவிடவும்.
குறிப்பு
துவையல் ரோஜா நிறத்தில் வரும் என்பதால் இந்தப் பெயர். ஆனால், புது மிளகாய், புதுப் புளி உபயோகித்தால் தான் அந்த நிறம் வரும். இல்லையெனில் துவையல் நிறம் மாறிவிடும்.
காரம் குறைவாக சாப்பிடுபவர்கள், 2 மிளகாயைக் குறைத்து விடலாம்.
------------------------------------------------------------
Post a Comment