செட்டிநாடு உணவு-சும்மா குழம்பு (அல்லது) தண்ணீக் குழம்பு
சும்மா குழம்பு (அல்லது) தண்ணீக் குழம்பு தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் - 15 (அ) பெரிய வெங்காயம் - 2 நாட்டுத் தக்காளி - 2 தண்ணியாகக் கரைத...

https://pettagum.blogspot.com/2011/07/blog-post_6292.html
சும்மா குழம்பு (அல்லது) தண்ணீக் குழம்பு
தேவையான பொருட்கள்
சின்ன வெங்காயம் - 15 (அ) பெரிய வெங்காயம் - 2
நாட்டுத் தக்காளி - 2
தண்ணியாகக் கரைத்த புளி
(ரசத்துக்குக் கரைப்பது போல) - ஒரு கப்
குழம்பு மிளகாய்தூள் - 11/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 5 பல்
தாளிக்க
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு, வெந்தயம் - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - இரு ஆர்க்கு
செய்முறை
வெங்காயம், தக்காளி சன்னமாக நீளமாக நறுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தாளிக்கும் சாமான்களைப் போட்டுத் தாளித்து, கறிவேப்பிலை போட்டு, நறுக்கிய வெங்காயம், தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு புளிக்கரைசலை விட்டு, மிளகாய்தூள் போட்டு, உப்பு சேர்த்து மூடவும். புளி, மிளகாய்தூளின் பச்சை வாசனை போன பிறகு, பூண்டுப்பற்களைத் தட்டிப் போட்டு, பச்சையாகக் கொஞ்சம் கறிவேப்பிலையைப் போட்டு மூடி வைத்து, அடுப்பை அணைத்து விடவும். சில நிமிடங்கள் கழித்துத் திறந்தால் வாசம், சும்மா ஊரைத் தூக்கும். செட்டிநாட்டின் மிக எளிமையான குழம்பு இது.
குறிப்பு
இந்தக் குழம்பு தண்ணியாகத்தான் இருக்க வேண்டும். இட்லி, தோசைக்கு நல்ல ஜோடி என்றாலும், தாளித்த இட்லிக்கும், அரிசி உப்புமாவுக்கும் பிரமாதமான சுவை கொடுக்கும்.
---------------------------------------------------------------------
Post a Comment