செட்டிநாடு உணவு-பச்சடி
பச்சடி தேவையான பொருட்கள் பாசிப்பருப்பு - 1/4 கப் கத்தரிக்காய் - 4 உருளைக்கிழங்கு - 1 தக்காளி - 1 பச்சை மிளகாய் - 6 சின்ன வெங்காயம் - 10 புள...

https://pettagum.blogspot.com/2011/07/blog-post_6091.html
பச்சடி
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 1/4 கப்
கத்தரிக்காய் - 4
உருளைக்கிழங்கு - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 6
சின்ன வெங்காயம் - 10
புளி - ஒரு கோலிக்குண்டு அளவு
உப்பு - தேவைக்கேற்ப
மஞ்சள் (விருப்பப்பட்டால்) - 1 சிட்டிகை
தாளிக்க
எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - 1 சிட்டிகை
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு
செய்முறை
பாசிப்பருப்பை வேகவைத்தெடுக்கவும். கத்தரிக்காய், உருளைக்கிழங்கைப் பொடியாக நறுக்கவும். தக்காளி, சின்ன வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். பச்சைமிளகாயைக் கீறிக் கொள்ளவும்.
ஒரு இருப்புச் சட்டியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயைப் போட்டு வதக்கி, பிறகு கத்தரிக்காயையும், உருளைக்கிழங்கையும், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போக வதங்கியதும். அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக விடவும். நன்கு வெந்ததும், வேக வைத்த பாசிப்பருப்பைச் சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி, உப்பு சேர்க்கவும். இது நன்கு கொதித்து, பச்சை வாசனை போனதும் இறக்கவும்.
ஒரு வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பெருங்காயம் போட்டுப் பொரியவிடவும். பிறகு, வரமிளகாய் பிய்த்துப் போட்டு, கருகிவிடாமல், இறக்கி வைத்திருக்கும் பச்சடியைத் தூக்கி ஊற்ற வேண்டும். குழந்தைகளுக்குப் பிடித்த சைட்-டிஷ் இது.
குறிப்பு
குக்கரில் வைப்பதென்றால், பாசிப்பருப்புடன் நறுக்கிய கத்தரிக்காய், உருளைக்கிழங்கு, வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் எல்லாவற்றையும் போட்டு மஞ்சள்தூள் சேர்த்து 2 விசிலுக்கு வைத்தெடுக்கவும். பிறகு, முன்பு சொன்னது போல புளி கரைத்து ஊற்றி, உப்புப் போட்டுக் கொதிக்க விட்டுத் தாளிக்கவும்.
------------------------------------------------------------------------------------
Post a Comment