தேவையானவை: கொள்ளு கால் கப், துவரம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன், புளி எலந்தம்பழம் அளவு, மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, தக்காளி 2, வெங்காயம் 1, பூண்டு 3...

தேவையானவை: கொள்ளு கால் கப், துவரம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன், புளி எலந்தம்பழம் அளவு, மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை, தக்காளி 2, வெங்காயம் 1, பூண்டு 3 பல், கறிவேப்பிலை, கொத்தமல்லி சிறிதளவு, உப்பு தேவையான அளவு.
அரைக்க: மிளகு, சீரகம், தனியா தலா ஒன்றரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 2, பூண்டு 3 பல்.
தாளிக்க: கடுகு, வெந்தயம் தலா கால் டீஸ்பூன், எண்ணெய் ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை சிறிதளவு.
செய்முறை: கொள்ளை 5 முதல் 6 மணி நேரம் வரை ஊற வைத்து துவரம்பருப்பு, பூண்டுடன் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். வெந்ததும் தண்ணீரை வடித்து தனியே எடுத்து வைத்து விட்டு, கொள்ளு பருப்பு கலவையை அரைத் துக் கொள்ளவும். அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களில் பூண்டு நீங்கலாக மற்றவற்றை விழுதாக அரைத்து, அதில் பூண்டை நசுக்கி சேர்க்கவும்.
புளியை அரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும். இதில் வேக வைத்து அரைத்த கொள்ளு துவரம்பருப்பு, வடித்த தண்ணீர், அரைத்த விழுது, தக்காளி, கறிவேப்பிலை கொத்தமல்லி, உப்பு எல்லாவற்றையும் போட்டு கரைத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் தாளிக்கும் பொருட்களைப் போட்டு தாளித்து, கரைத்து வைத்துள்ள கரைசலை ஊற்றி, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
கொள்ளு ரசம்: கொள்ளுவில் அதிக அளவு புரதச்சத்து உள்ளது. தோலுடன் செய்வதால் நார்ச்சத்தும் கிடைத்துவிடும். இந்த ரசத்தை சூப்பாகவும் குடிக்க லாம்.
________________________________________
Post a Comment