சமையல் குறிப்புகள்! ஜவ்வரிசி தளிர் வடாம்
தேவையானவை: ஜவ்வரிசி - 2 கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பச்சைமிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு - ...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_6725.html
தேவையானவை: ஜவ்வரிசி - 2 கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், பச்சைமிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்.
செய்முறை: ஜவ்வரிசியை 3 முதல் 4 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு வடிய விட்டு உப்பு, பெருங்காயத்தூள் பச்சைமிளகாய் விழுது, எலுமிச்சைச் சாறு சேர்த்து பிசையவும். இலை அல்லது தட்டில் எண்ணெய் தடவி, பிசைந்து வைத்துள்ள ஜவ்வரிசியில் சிறிது எடுத்து மெல்லிய வட்டங்களாக தட்டவும். இவற்றை இடியாப்ப தட்டில் தனித் தனியே வைத்து ஆவியில் வேக விட்டு, வெயிலில் காய வைத்து எடுக்கவும்.
Post a Comment