தேவையானவை: முளைக்கீரை (அ) சிறுகீரை (அ) அரைக்கீரை - அரை கட்டு (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள்...

தேவையானவை: முளைக்கீரை (அ) சிறுகீரை (அ) அரைக்கீரை - அரை கட்டு (பொடியாக நறுக்கவும்), கொத்தமல்லி - ஒரு கைப்பிடி, உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன், பச்சைமிளகாய் - 2, பூண்டு - 3 பல், புளி - சிறிய நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கீரை, கொத்தமல்லியை சுத்தம் செய்து கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்-ததும் உளுத்தம்பருப்பைப் போட்டு, பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் கீறிய பச்சைமிளகாய், பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.
பிறகு அதில் கீரையை சேர்த்து, சிறிது தண் ணீர் தெளித்து கிளறி மூடவும். குறைந்த தீயில் கீரை வெந்ததும் கொத்தமல்லி சேர்த்துக் கிளறி இறக்கவும். ஆறியதும் புளி, உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும். முளைப்பயறு பான் கேக்குக்கு ஏற்ற சைட்-டிஷ் இந்தத் துவையல்.
--------------------------------------------------------------------------------
Post a Comment