ஹெல்த் ஸ்பெஷல்! பனிக்காலத்தில் சரு மத்தை பாதுகாப்பது எப்படி ?

பனிக்காலத்தில் எண்ணெய்ப் பசை சருமம் கூட வறண்டு போகும். இன்னும் சிலருக்கு சருமம் வெடித்தும் விடும். அந்தள வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்தப...

பனிக்காலத்தில் எண்ணெய்ப் பசை சருமம் கூட வறண்டு போகும். இன்னும் சிலருக்கு சருமம் வெடித்தும் விடும். அந்தள வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்தப் பனிக்காலத்திலிருந்து நம்முடைய சரு மத்தை எப்படித்தான் பாதுகாப்பது? ஈரப்பதத்தைக் காப்பாற்றுங்கள் பனிக்காலம் முதலில் ‘அட்டாக்’ செய்வது நம் உடலிலுள்ள ஈரப்பதத்தைத்தான். இதற்குத் தீர்வு, தரமான மாய்ஸ்ரைஸர் க்ரீமும், கோல்டு க்ரீமும்தான்! தினம் குளித்தவுடன், அல்லது முகம் கழுவியவுடன் இவற்றை உபயோகிக்க வேண்டும்! வெள்ளரி விதை ஃபேஸ் பேக் தினம் முழுக்க முகத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்க இதோ இந்த ஃபேஸ் பேக்கூட உதவும்! சந்தனம் மற்றும் வெள்ளரி விதைகளை நன்கு அரைத்து முகத்தில் அப்ளை பண்ணுங்கள். பத்து நிமிடம் கழித்து ‘வாஷ்’ செய்துவிடுங்கள். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வர, முகம் பாலிஷ்போட்ட குத்து விளக்கு போல் ஜொலிக்கும். சந்தனமும், வெள்ளரி விதையும் முகத்தின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். இவையிரண்டும் குளிர்ச்சியான பொருட்கள் என்றாலும், வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே அப்ளை செய்வதால் சளிப் பிடிக்காது! பித்த வெடிப்பு பனிக்காலத்தில் மிக சகஜமான ஒரு விஷயம் பித்த வெடிப்பு. இதற்கு மிதமான சுடுநீரில் பாதங்களை சுத்தப்படுத்திவிட்டு, ஈரம் போக நன்கு துடையுங்கள். பிறகு விளக்கெண்ணெயை பித்த வெடிப்புகளில் தடவி வாருங்கள். தொடர்ந்து இப்படிச் செய்து வர, பித்த வெடிப்புக்கு ‘குட்பை சொல்லலாம். உணவு மூலம் எப்படி சருமத்தின் ஈரப்பதத்தைக் காப்பாற்றலாம்? தனியா விதை சூப் ஒரு டீஸ்பூன் தனியா விதையை 3 டம்ளர் தண்ணீரில் போட்டு, அது ஒரு டம்ளராகும் வரை கொதிக்க விடவும். பிறகு, தேவைப்பட்டால் உப்பு, மிளகுத்தூள் சேர்க்க தனியா விதை சூப் ரெடி! இது பனிக்காலத்தில் ஏற்படும் அஜீரணத்துக்கு ஏற்ற சூப்பும் கூட! ஓட்ஸ், தயிர் கஞ்சி அரை கப் ஓட்ஸை பவுடராக்கி, அதை ஒன்றரை கப் தண்ணீரில் இரவே ஊற வைத்து விடுங்கள். காலையில் அதில் ஒரு சிறிய கப் தயிர், ஒரு சிட்டிகை உப்புப் போட்டு வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை சாப்பிட்டு வாருங்கள். சருமம் சாஃப்ட்டாகவும், நல்ல நிறமாகவும் மாறும். தயிரை உணவில் சேர்த்துக் கொண்டால், பனிக்காலத்தில் ஏற்படும் சரும வறட்சியை தடுப்பதோடு, சருமத்தைப் பளிச் சென்றும் மாற்றிவிடும். அதே நேரத்தில் தயிர், சளித் தொல்லையையும் ஏற்படுத்தாது. பனிக்கால ரெசிபிகளை ஃபாலோ செய்யுங்கள். அழகாகுங்கள்! தக்காளி சூப் 2 பெரிய தக்காளியை வேக வைத்து, தோலை உரித்துவிட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். இத்துடன் உப்பு, மிளகுத்தூள் (ருசிக்கேற்ப) போட்டு 2 நிமிடம் கொதிக்க விட்டால் தக்காளி சூப் ரெடி. உடலின் வறட்சியையும் சரும வறட்சியையும் இது நீக்கும்! பேபி கார்ன் சூப் மூன்று பிஞ்சு சோளங்களை குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும். பிறகு சோளங்களை உதிர்த்து எடுத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இதை வடிகட்டி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் உயிர் சத்துக்கள் நிறைந்த பேபி கார்ன் சூப் ரெடி! இது சரும பளபளப்புக்கு உதவும்! பனிக்கால கூந்தல் பராமரிப்பு பனிக்காலத்தில் சருமம் போலத்தான் கூந்தலும் பாதிக்கப்படுகிறது. வறண்ட கூந்தல், எண்ணெய்ப் பசை கூந்தல், நார்மலான கூந்தல் என்று எந்த வித்தியாசமும் கிடையாது இந்தப் பனிக்காலத்தில் பொடுகு, அரிப்பு ஏற்பட்டு, முடிகொட்டி கூந்தலே நாசமாகிவிடும். இதற்கு தேங்காய் எண்ணெயுடன், 10 துளிகள் விளக்கெண்ணெய் கலந்து சூடாக்கி மண்டையோட்டில் படும்படி அழுத்தித் தடவுங்கள். பிறகு சூடான நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் 10 நிமிடங்கள் ஒத்தடம் கொடுத்து, தலையை வாஷ் செய்து விடுங்கள். பொடுகும் வராது. முடியும் கொட்டாது.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 1326610618326141032

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item