தேவையானவை: கறிவேப்பிலை & ஒரு கப், மிளகு & ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் & 10, புளி & கொட்டைப்பாக்கு அளவு, மஞ்சள்தூள் & ...

தேவையானவை: கறிவேப்பிலை & ஒரு கப், மிளகு & ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் & 10, புளி & கொட்டைப்பாக்கு அளவு, மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், வெல்லம் & சிறிதளவு, நல்லெண்ணெய் & கால் கப், கடுகு & கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் & கால் டீஸ்பூன். உப்பு & தேவையான அளவு.
செய்முறை: மிளகு, காய்ந்த மிளகாய் இரண்டையும் வறுத்து அதனுடன் புளி, கறிவேப்பிலை, வெல்லம், உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும். பிறகு அடி கனமான கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, பெருங்காயத்தூள், மஞ்சள்தூள் போட்டு தாளித்து, அரைத்து வைத்துள்ள கறிவேப்பிலை விழுதைச் சேர்த்து எண்ணெய் பிரியும் வரையில் சுருளக் கிளறி இறக்கவும்.
இது ஜீரணத்துக்கு மிகவும் நல்லது.
______________________________________
Post a Comment