சமையல் குறிப்புகள்! முளைப்பயறு பான் கேக்
தேவையானவை: முளைப்பயறு - ஒரு கப், இஞ்சி - ஒரு துண்டு, பச்சைமிளகாய் - 1, சீரகம் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, கேரட் துருவல்...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_28.html
தேவையானவை: முளைப்பயறு - ஒரு கப், இஞ்சி - ஒரு துண்டு, பச்சைமிளகாய் - 1, சீரகம் - அரை டீஸ்பூன், கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு, கேரட் துருவல் - சிறிதளவு, ஊறவைத்த கொண்டைக்கடலை (அ) சோயா - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: கேரட் துருவல், எண்ணெய் நீங்கலாக மற்ற எல்லா பொருட்களையும் தேவையான தண்ணீர் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். இதை இட்லி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ள வும்.
தோசைக்கல் காய்ந்ததும், கரைத்த மாவை சிறிய பான் கேக்குகளாக ஊற்றவும். கேக்கை சுற்றிலும் லேசாக எண்ணெய் விட்டு திருப்பிப் போடவும். இருபுறமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும். மேலே கேரட் துருவலை தூவி பரிமாறவும்.
--------------------------------------------------------------------------------
Post a Comment