நார்ச்சத்தில் நளபாகம்! கீரை வித் சோயா
தேவையானவை: முளைக்கீரை (அ) அரைக்கீரை ஒரு கட்டு, சிறிய சோயா துகள்கள் கால் கப், தக்காளி, பச்சைமிளகாய் தலா 1, உப்பு தேவையான அளவு. தாளிக்க: கடுகு...
https://pettagum.blogspot.com/2011/03/blog-post_6000.html
தேவையானவை: முளைக்கீரை (அ) அரைக்கீரை ஒரு கட்டு, சிறிய சோயா துகள்கள் கால் கப், தக்காளி, பச்சைமிளகாய் தலா 1, உப்பு தேவையான அளவு.
தாளிக்க: கடுகு, சீரகம் தலா கால் டீஸ்பூன், நசுக்கிய பூண்டு ஒரு டீஸ்பூன், எண்ணெய் ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் 1.
செய்முறை: கீரையை நன்றாக சுத்தம் செய்து அலசி, பொடியாக நறுக்கவும். இதனுடன் பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து, அரை கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து மூடி ஒரு விசில் வந்ததும் இறக்கவும். ஒரு நிமிடம் கழித்து விசிலை மெதுவாக எடுத்து விட்டு திறக்கவும். வெந்த கீரையை மசித்துக் கொள்ளவும்.
சோயாவை கொதிக்கும் நீரில் போட்டு, ஐந்து நிமி டம் ஊற விடவும். பிறகு அதைப் பிழிந்து, மசித்த கீரையில் சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம், காய்ந்த மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில் நசுக்கிய பூண்டைச் சேர்த்து நன்றாக வதக்கி, கீரை கலவை சேர்த்து இறக்கவும். லேசாக கடைந்து பரிமாறவும்.
கீரை வித் சோயா: கீரையில் நார்ச்சத்தும் கால்ஷியமும் அதிக அளவு இருக்கிறது. பொதுவாக கீரையுடன் பருப்பு சேர்த்துச் செய்வோம். இதில் சோயா சேர்த்திருப்பதால், புரதச்சத்தும் வைட்டமின்களும் அதிகமாகக் கிடைக்கும்.
----------------------------------------------------------------------------------------------------------
Post a Comment