சமையல் குறிப்புகள்! ஓட்ஸ் சூப்
தேவையானவை: ஓட்ஸ் & ஒரு கைப்பிடி அளவு, பால் & ஒரு கப், பூண்டு & 3 பல் (விரும்பினால்), மிளகுத்தூள் & அரை டீஸ்பூன், வெண்ணெய் &...
https://pettagum.blogspot.com/2011/02/blog-post_5276.html
தேவையானவை: ஓட்ஸ் & ஒரு கைப்பிடி அளவு, பால் & ஒரு கப், பூண்டு & 3 பல் (விரும்பினால்), மிளகுத்தூள் & அரை டீஸ்பூன், வெண்ணெய் & 2 டீஸ்பூன், உப்பு & சுவைக்கேற்ப.
செய்முறை: பூண்டுப் பல்லை பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். வெண்ணெயை உருக்கி, பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி அதில் ஓட்ஸை சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்குங்கள். 2 கப் கொதிக்கும் தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வேகவிட்டு பால், உப்பு சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கி, மிளகுத்தூள் சேர்த்து பரிமாறுங்கள்.
Post a Comment