தேவையானவை: பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், நெய் - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா அ...

தேவையானவை: பொடியாக நறுக்கிய கத்தரிக்காய் - ஒரு கப், பாசிப்பருப்பு - கால் கப், நெய் - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு - தலா கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 4, கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை: ஒரு கடாயில் பாசிப்பருப்புடன் மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். பருப்பு முக்கால் பதம் வெந்ததும் அதில் நறுக்கிய கத்தரிக்காய், உப்பை சேர்க்கவும். காய் வெந்ததும் அதில் அரைக்கக் கொடுத்துள்ளவற்றை அரைத்து சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். நெய்யில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் தாளித்து சேர்க்கவும்.
--------------------------------------------------------------------------------
Post a Comment