ஹெல்த் ஸ்பெஷல்! வெள்ளரிக்காயின் பயன்கள்.

கோடையில் நம்மை தாக்கும் வெயில், வெம்மை, நாவறட்சி போன்ற பல்வேறு தொல்லைகளை நாம் வெல்லுவதற்கு பல முறைகளைக் கையாள்கிறோம். குளிர்பானங்கள், பழங்க...

கோடையில் நம்மை தாக்கும் வெயில், வெம்மை, நாவறட்சி போன்ற பல்வேறு தொல்லைகளை நாம் வெல்லுவதற்கு பல முறைகளைக் கையாள்கிறோம். குளிர்பானங்கள், பழங்கள் மற்றும் பல்வேறு முறைகளைப் பின்பற்றுகிறோம். எனினும் நம்மால் முழுமையாக கோடையை வெல்ல முடிவதில்லை. கோடைத் தொல்லைகளை எளிதில் வெல்லுவதற்கு மிகவும் உதவி புரிவது வெள்ளரிக்காய் பிஞ்சுகளாகும். சாப்பிடுவதற்கு ருசியாகவும், மிகவும் குளிர்ச்சி பொருந்திய தன்மைகளைத் தன்னகத்தே கொண்டது, வெள்ளரிக்காய். தாவரம் வெள்ளரிக்காயின் தன்மைகளை, பயன்களை அறிந்து பயன்படுத்தி வந்துள்ளனர். சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பேயே இதைப் பயன்படுத்தி உள்ளதாக குறிப்புகள் உரைக்கின்றன. வட இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட வெள்ளரிக்காய் இன்று இந்தியா முழுவதும் பரவி உள்ளது. இதில் அடங்கியுள்ள சத்துக்கள் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. மட்டுமின்றி புரதச்சத்து, கொழுப்பு, தாது உப்புக்கள், சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், இரும்பு போன்ற சத்துக்களும், வைட்டமின் பி மற்றும் சி உள்ளன. வெள்ளரிக்காயை குறிக்கும் பல்வேறு மொழிப்பெயர்கள் ஆங்கிலம் _ குக்கும்பர், சமஸ்கிருதம்_ ஷகுலா, இந்தி_கங்க்ரி, வங்காளம் _ சிரா, குஜராத் _ காக்ரி, தெலுங்கு _ டொஸெகாயா, கன்னடம்_ சாதெக்காயி, அரபு _ பாஸாருவா. வெள்ளரிக்காய் தாவரவியலில் ‘குக்குமிஸ் சாட்டைவஸ்’ என அழைக்கப்படுகிறது. இது ‘குக்குர்பிட்டேசியே’ என்ற தாவரக் குடும்பத்தின் கீழ் வருகிறது. தமிழ்ப்பெயர்கள் ஊர்வரப்பன கூதாரி படோலிகை விரலி கொடுங்காய் வெள்ளரிக்காயை எப்படி சாப்பிடலாம் வெள்ளரிக்காயை எப்படி வேண்டுமானாலும் சாப்பிடலாம். கோடைக்காலத்தில் வீணாகப் பணத்தைச் செலவு செய்து ஜூஸ், செயற்கை இனிப்பு ஊட்டப்பட்ட பானங்களை வாங்கி அருந்துவதால், உண்மையிலேயே தாகம் தீராது. மாறாக வெள்ளரிக் காயை உண்பது சிக்கனம் மட்டுமின்றி தாகத்தையும், வெம்மையையும் தீர்க்கும் ஒரே வழியாகும். வெள்ளரிக்காயை பிஞ்சாக உண்ணலாம். பழமாக உண்ணலாம். பழக்கூழாக உண்ணலாம், சாறாக அருந்தலாம். மிக்சி யிலிட்டு அரைத்து உண்ணலாம். உலர வைத்து உண்ணலாம். இளநீரில் கலந்து அருந்தலாம். கூட்டு, குழம்பு வைத்து உண்ணலாம். ஆனால், பச்சையாக உண்பது தான் சிறப்பு ஆகும். வெள்ளரிக்காயின் சிறப்புத் தன்மைகள் வெள்ளரிக்காய் இளநீர், நுங்கு போன்று இயற்கையான ஒரு குளிர்ச்சி தரும் இயற்கையான தாவரப் பொருளாகும். வெள்ளரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். வயிற்றில் அஜீரணத்தை நீக்கி ஜீரணத்தைப் பெருக்கும். பித்தம், பித்தநீர், பித்த சம்பந்தமான தலை சுற்று, பித்த வாந்தி இவைகளை குணப்படுத்தும். வயிறு நிறைய உணவு உண்ட பின் ஓரிரு வெள்ளரிக்காய் துண்டுகளை உண்ண வயிற்றுப் பொருமல் நீங்கும். வெள்ளரிக்காய் வயிற்றுக்கு குளிர்ச்சியைத் தரும். உடல் வெம்மையை நீக்கும். கோடை வெப்பத்தால் ஏற்படும் உடல், தலை சூடு இவற்றைத் தணிக்க வெள்ளரிக்காயை விஞ்சுவதற்கு வேறு எதுவுமே இல்லை. மருத்துவப் பயன்கள் « வெள்ளரிச்சாறுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட உடல் ஊட்டம் பெறும். « வெள்ளரிச்சாறுடன் பால் கலந்து முகத்தில் தேய்த்து, ஊறிய பின் கழுவி வர முகம் பளபளப்பு அழகு பெறும். « வெள்ளரிக்காய் விதைகளை அரைத்து, அடிவயிற்றில் பூச நீர்க்கடுப்பு நீங்கி, நீர் எளிதில் பிரியும். « வெள்ளரிப் பழத்தை அரைத்து பால், சர்க்கரை சேர்த்து சாப்பிட உடல் குளிர்ச்சி பெறும். « வெள்ளரிச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட வயிற்று நோய், தொண்டை நோய்கள் தீரும். « இளநீருடன் வெள்ளரித் துண்டுகளை கலந்து சாப்பிட வயிற்றுக் கடுப்பு நீங்கும். « வெள்ளரி இலைகளை நீரிலிட்டு காய்த்து வடிகட்டி, இளநீரில் கலந்து மணிக்கு இரண்டு அவுன்ஸ் வீதம் சாப்பிட வயிற்றுப் போக்குத் தீரும். « வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி முகத்தில் வைக்க முகம் குளிர்ச்சி பெறும். தோல் சுருக்கம் நீங்கும். « தயிர் அல்லது மோரில் வெள்ளரிக்காயை வெட்டிப் போட்டு சாப்பிட தாகம் தீரும். அஜீரணம் நீங்கும். « வெள்ளரிக்காய் துண்டுகளோடு தக்காளி, காரட், பீட்ரூட் துண்டுகளைச் சேர்த்து உப்பு, மிளகு சேர்த்து சாலட் போல் சாப்பிட உடலுக்கு மிக நன்மை கிடைக்கும். « வெள்ளரிக்காயை வட்டமாக வெட்டி, உப்பு மிளகாய்த் தூள் சேர்த்து சாப்பிட வயிற்றுக்கோளாறுகள் மாறும். « வெள்ளரிச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தேய்த்து ஊறியபின் கழுவி வர, கோடை வெயிலால் ஏற்பட்ட முகச் சுருக்கம் மாறி முகம் பொலிவு பெறும். « வெள்ளரிக்காயைத் தொடர்ந்து உண்டு வந்தால் சொறி, சிரங்கு குணமாகும். நரம்புகள் வலுப்பெறும். மஞ்சள் காமாலை குணமாகும்.

Related

ஹெல்த் ஸ்பெஷல் 5516384393985556226

Post a Comment

Tamil Unicode Converter

Find Here

Date & Time

No. of Posts

Follow Pettagum on Twitter

Follow pettagum on Twitter

Counter From Jan 15 2011

Try this

Total Pageviews

Advertisement

Contributors

Popular Posts

Blog Archive

Followers

Cloud Labels

30 நாள் 30 வகை சிறுதானிய உணவுகள் 30 நாள் 30 வகை சமையல் 30 வகை மருந்து குழம்பு E-BOOKS GOVERNMENT LINKS Greetings WWW-Service Links அக்கு பிரஷர் சிகிச்சை முறைகள். அசோலா ஓர் அட்சயப் பாத்திரம் அடை வகைகள். அமுத மொழிகள் அழகு குறிப்புகள். ஆசனம் ஆப்பிள் சிடர் வினிகர் ஆரோக்கியம் காக்கும். ஆயுர்வேத மருத்துவம் ஆறு சுவையும்... அஞ்சறைப் பெட்டியும்... இஃப்தார் நோன்பு ஸ்பெஷல் இந்த நாள் இனிய நாள் இந்தியா நமது தேசம்! தேசத்தின் நேசம் காப்போம்!! இய‌ற்கை மருந்துகளின் ஆயுள்காலம் இய‌ற்கை வைத்தியம் இன்ஷூரன்ஸ் இஸ்லாமிய உணவுகள். ஈஸியா பேசலாம் இங்கிலிஷ்! உங்களுக்கு உதவும் சட்டங்கள் உடலுக்கு வலிவு தரும் சூப்கள் உடற்பயிற்சி உணவே மருந்து உபயோகமான தகவல்கள் உலகத்தமிழ் மங்கையர்மலர் ஊறுகாய்கள் ஃபண்ட் முதலீடுகள் கணிணிக்குறிப்புக்கள் கல்வி வழிக்காட்டி கவிதைத்துளிகள் கன்சல்ட்டிங் ரூம் காய்கறிகளின் மருத்துவ குணங்கள் கால்நடை வளர்ப்பு கால்நடைகளுக்கான இயற்கை மருத்துவம் காளான் வளர்ப்பு குழந்தைகள் நலம்! குழம்பு வகைகள் குளிர் பானங்கள் குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு!!! கை மருந்துகள் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உணவுகள் கொரோனாவுக்கு மருந்து சட்னிகள் சமையல் அரிச்சுவடி சமையல் குறிப்புகள் சமையல் குறிப்புகள்-அசைவம்! சமையல் குறிப்புகள்-சைவம்! சமையல் சந்தேகங்கள்-கேள்வி-பதில் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள் சித்த மருத்துவம் சிந்தனை துளிகள் சிந்தனை துளிகள். சிறுதானிய உணவுகள் சுற்றுலா சூரணம் சேமிப்பின் சிறப்பு டெங்குக் காய்ச்சல். தமிழகத்தின் சுற்றுலா தளங்கள் தமிழால் இணைவோம் தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும் தாய் சேய் நலம்! துவையல்கள் நாட்டு மருந்துகளின் பெயர்கள் நாட்டு வைத்தியம் நாட்டுக் கோழி வளர்ப்பு நாட்டுப்புறப் பாடல்கள் நாட்டுப்புறப் பாடல்கள். நில அளவுகள் அறிவோம் நீங்களும் பிசினஸ்மேன் ஆகலாம் நீதி நூல்கள் பச்சடிகள் பலவிதம் பதிவுத்துறை சட்டங்கள் பரீட்சை சுலபமாக பழங்களின் பயன்கள் பாட்டி வைத்தியம் பிசிஓஎஸ் பிரச்னை குணமாகும் பிசினஸ் ஸ்பெஷல் புகைப்படங்கள் பூக்களின் மருத்துவக் குணங்கள் பெட்டகம் சிந்தனை பெண்களுக்கான நோய்களும் இயற்கை மருத்துவமும் பேலியோ டயட் பொடி வகைகள் மசாலா பால் மண்ணில்லாமல் பசுந்தீவனம் வளர்ப்பு மரம் வளர்ப்போம் மருத்துவ டிப்ஸ் மருத்துவ டிப்ஸ் வீடியோ பதிவுகள் மருத்துவக் குணம் நிரம்பிய உணவுகள் மருத்துவக் குறிப்பு மன நலம்! மாடித்தோட்டம் முகவரிகள். மூலிகை சமையல் மூலிகைகள் கீரைகள் மைக்ரோ கீரைகள் ரிலாக்ஸ் ப்ளீஸ் வங்கியில் பல வகை கடன்கள் வடாம் வகைகள் வத்தல் வகைகள் வரலாற்றில் ஒரு ஏடு வருமான வரி விவசாயக்குறிப்புக்கள் விஷப்பூச்சிகள் கடிக்கு இயற்கை வைத்தியம் வீடியோ பதிவுகள் வீட்டிலிருந்தே சம்பாதிக்க வீட்டுக்குறிப்புக்கள் வேலை வாய்ப்புகள் ஜூஸ் வகைகள் ஷாப்பிங் போகலாமா..? ஹெல்த் ஸ்பெஷல் ஹோமியோபதி மருத்துவம்
item